ஆஹா ரோஜா

ஆஹா ரோஜா 

காதலின் சின்னமாக, காதலில் தூதனாக திகழும் ரோஜா மலர்களில் அழகும் அன்பு மட்டும் அல்ல ஆரோக்கியமும் ஏராளமாக இருக்கின்றன.

 எல்லா காலங்களிலும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய இந்த நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜா எளிதில் கிடைக்கக்கூடிய பூ என்பதாலேயே இதில் மறைந்து கிடக்கும் பல மருத்துவ குணங்களை நாம் பெரிதாக கண்டு கொள்வதில்லை. 

தினமும் ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால் நம் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும்.

 நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது.

 இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் இருக்க முடியும்.

 10 கிராம் ரோஜா பூவை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து குடிநீர் ஆக்கி, வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடிக்க பித்த நோய் கட்டுப்படும்.

 ரோஜா பூ இதழ்களில் இருந்து குடிநீர் செய்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.

 10 கிராம் ரோஜா மொட்டுகள், 10 கிராம் செம்பருத்தி பூ, 4 செம்பருத்தி பூ இலையை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வாரம் ஒரு முறை இதை தலைக்கு தேய்த்து அலசுங்கள். ரோஜாவில் எண்ணெய் பசை இருப்பதால் பளபளப்பு கொடுக்கும்.

 வெற்றிலை பாக்கு போடும் போது ரோஜா இதழ்களை சிறிது சேர்த்துக் கொண்டால் அஜீரண கோளாறு நீங்கும்.
 ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது இந்த ரோஜாக்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை