குழந்தைகளுக்கு சரியான டயப்பரை தேர்வு செய்யுங்கள்

குழந்தைகளுக்கு சரியான டயப்பரை தேர்வு செய்யுங்கள்
சிறு குழந்தைகள் அணிந்திருக்கும் துணியில் அடிக்கடி சிறுநீர், மலம் கழிப்பது இயல்பு.

 சில தலைமுறைகள் முன்பு வரை குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி துணைகள் துணிகளை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள்.

 ஆனால் இப்போது பலரும் குழந்தைகளுக்கு டயப்பர் அணிகிறார்கள்.

 பொருத்தமான டயப்பரை தேர்வு செய்யாவிட்டால் குழந்தையின் சருமத்தில் அரிப்பு ஏற்படுவது, சிவந்து போவது போன்ற பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

 டயபரை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியவை இங்கே :

 தரம்

டயப்பரையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது.

 துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடியது என இரண்டு வகைகள் உண்டு.

 பெரும்பாலும் தாய்மார்கள் ஒரு முறை பயன்படுத்தும் வகையிலான டயப்பரைத்தான் தேர்வு செய்கிறார்கள்.

 இத்தகைய டயப்பர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள துணி, பஞ்சு போன்றவை தரம் குறித்து ஆராய வேண்டும்.

 ஈரத்தை உறுஞ்சுவதற்காக டயப்பரின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் திரவம் பாதுகாப்பானதா? என்பதை தெரிந்து கொண்ட பின்னரே அந்த டயப்பரை தேர்வு செய்ய வேண்டும் அல்லது உங்கள் குழந்தையின் உடல் எடையை பொறுத்து டயபரின் அளவு மாறுபடும்.

 டயப்பர் அணியும்போது

குழந்தைகளுக்கு இருக்குமாக இல்லாமல் சற்று தளர்வாக இருக்க வேண்டும்.

 இறுக்கமான டைப்பர்கள் குழந்தைகளின் சருமத்திற்கு செல்லும் காற்றோட்டத்தை தடை செய்து சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.

 உறிஞ்சும் தன்மை 

ஈரப்பதத்தை முழுவதுமாக உறிஞ்சி குழந்தையின் சருமத்துக்கு உலர்வான தன்மையை கொடுப்பதே டையப்பரின் முக்கிய வேலையாகும்.

 குழந்தையின் சருமத்தை பாதிக்காத வகையில் டையப்பரின் தயாரிப்பு அதில் பயன்படுத்தப்படும் துணி மற்றும் பஞ்சு ஆகியவை இருக்க வேண்டும்.

 அப்போதுதான் குழந்தையின் சருமத்தில் புண், அரிப்பு, தழும்புகள் பதியும் அடையாளங்கள் ஏற்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும் .

சரும பாதுகாப்பு 

டயப்பரை கழற்றிய உடன் ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் வினிகரை கலந்து குழந்தையின் உடலில் டயப்பர் அணியும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

 இதன் மூலம் ஒவ்வாமை ஏற்படுவதை தடுக்க முடியும்.

 அதை கழட்டிய பின்பும் குழந்தையின் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும்.

 இது கிருமி தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.

 பயன்படுத்தும் முறை 

இரண்டு வயது வரை மட்டுமே குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்தலாம்.

 நாள் முழுவதும் குழந்தைக்கு டையப்பர் அணுவிக்காமல் இரவு நேரங்களில் மட்டும் அணுவிக்கலாம் .
குறைந்த பட்சம் 4 மணி நேரம் வரை மட்டுமே ஒரு டயப்பரை அணுவிக்க வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை