சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா?

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? 
நாம் உணவு உண்ணும் போது எப்படி உண்ண வேண்டும் என்று நம் முன்னோர்கள் சில வழிமுறைகளை நமக்கு வகுத்து தந்துள்ளார்கள்.

 ஆனால் அவ்வாறு நாம் பின்பற்றுகிறோமா? என்றால் இல்லை என்பதுதான் பெரும்பான்மையான பதிலாக இருக்கிறது .

குறிப்பாக உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பது குறித்தான சில தகவல்களை இங்கே அறிவோம்:

 சாப்பாடு சாப்பிடுகையில் இடையிடையே தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும்.

 சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான காரணங்கள்.

 நமது வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான செரிமான அமிலங்கள் உள்ளன.

 இந்த செரிமான அமிலங்கள் நாம் உண்ணும் உணவை உடைக்கவும், செரிமான தொற்று ஏற்றிகளை அழிக்கவும் உதவுகிறது.

 மேலும் செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். எச்சிலானது உணவை உடைப்பதற்கான என்சைம்கள் சுரக்க உதவுகின்றது.

 அதனால் இது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.

 ஆனால் நாம் உணவுடன் இடையிடையே தண்ணீர் அருந்துவதால் இந்த செரிமான அமிலங்கள் நீர்த்து விடுகிறது.

 இதனால் ஒட்டுமொத்த உடல் அமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் நிறுத்தை ஏற்படுத்தும்.

 ஒட்டுமொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால் உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி ஊட்டச்சத்தை உறிஞ்ச சிறுகுடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும்.

 எனவே சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்.

 உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு முன்பாக வெந்நீர் குடித்து வரலாம்.

 அவ்வாறு சாப்பிட்ட முன்பாக வெந்நீரை குடிப்பதால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

 சப்பாத்தி, தோசை போன்ற உணவுப் பொருட்கள் எளிதில் தொண்டையில் உணவு குழாயில் அடைத்துக் கொள்ளும்.

 அதுபோன்ற நேரங்களில் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம்.

 எந்த காரணத்திற்காகவும் வாயில் உணவை வைத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாது.

 அவ்வாறு குடித்தால் புகை ஏறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

 சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சுத்தமான பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து பின்பு மிதமான சூட்டில் தண்ணீர் குடிக்கலாம்.

 தண்ணீருக்கு பதிலாக ஜூஸ் குடிக்கலாம்.
 ஜூஸில் கலோரி மற்றும் சர்க்கரையின் அளவு அதிகம் என்பதால் பருமனான உடல் கொண்டவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஜூஸை தவிர்ப்பது நல்லது.

கருத்துரையிடுக

புதியது பழையவை