கருணை மிகுந்த கருணை கிழங்கு

கருணை மிகுந்த கருணை கிழங்கு
காய்கறி உணவு வகைகளில் கிழங்கு வகைகள் பெரும்பாலானோருக்கு விருப்ப பட்டதாகும் .

ஆனால் ஒரு சில கிழக்குகள் வெறுப்பு உடையதாக இருக்கும்.

 அப்படி மக்களால் மறந்த கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கும் ஒன்று.

 பார்ப்பதற்கு கருப்பாக இருப்பதால் என்னவோ ? இதனை யாரும் விரும்பி உண்பதில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது .

இருவகையான கருணைக்கிழங்கு ஒன்று காரும் கருணைக்கிழங்கு, மற்றொன்று காரா கருணைக்கிழங்கு.

 முதலாம் வகை கிழங்கு சின்னதாக இருக்கும் இதனை பிடி கிழங்கு என்றும் அழைப்பர்.

 இதனை சமைத்து சாப்பிடும் போது நாக்கில் அரிப்பு தோன்றுவதால் இதனை காரும் கருணை கிழங்கு என்று அழைக்கப்படுகிறது.

 இரண்டாம் வகை அரிக்காது எனவே இதனை காரா கருணைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது.

 இது அளவில் பெரியதாக இருக்கும் இரண்டு கிழங்குகளிலும் ஒரே மாதிரியான சத்துக்கள் தான் காணப்படுகின்றன .

இந்த கருணை கிழங்கு வகைகள் உடலில் உள்ள உஷ்ணத்தை போக்கக்கூடியது .

குடல் மற்றும் மலக்குடலை வலிமையாக்க கூடியது.

 மூலம் வராமல் தடுக்கும்.

 மூலத்திற்கு மருந்தாகவும் பயன்படக்கூடியது.

 நாள்பட்ட சளி, இருமலையும் போக்கக்கூடியது.

 சமையலில் கருணைக்கிழங்கை சமைக்கும் போது அரிசி கலைந்த நீரில் போட்டு வேகவைத்து தோலை நீக்கிவிட்டு புளி சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும் .

காரா கருணையை தோலை நீக்கிவிட்டு அரிசி கலந்த நீரில் சிறிது உப்பு போட்டு ஊற வைத்த பின்பு கூட்டாக, பொறியலாக, சிப்ஸ் வகைகளாக சமைத்து சாப்பிடலாம்.

 நோய்க்கு மருந்தாகும்

 மூலநோய் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

 கருணைக்கிழங்கை சாப்பிட விரும்பாத மூல வியாதி உள்ளவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கருணைக்கிழங்கு லேகியம் கிடைக்கும் அதனை வாங்கி காலை, மதியம்,  இரவு என மூன்று வேளையும் மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூல நோயிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

 கிழங்கை வாங்கி சமைத்து சாப்பிட நினைப்பவர்கள் புதிய கிழங்கை வாங்காமல் நீர் வற்றிய பழைய கிழங்காக பார்த்து வாங்கி சமைத்து சாப்பிட்டால் நாக்கில் அரிப்பு ஏற்படாமல் சுவையாக சாப்பிடலாம்.

 இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு .

இன்சுலின் அளவை கட்டுக்குள் கொண்டு வரும் .

சர்க்கரை நோயாளிகள் பூமிக்கு கீழ் விளையும் கிழங்குகளை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்.

 காரணம் அதில் இன்சுலின் அதிகமாக இருக்கும் என்பதால்.

 ஆனால் கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் இன்சுலின் அளவை கட்டுக்குள் கொண்டுவரும் என்பது பல பேருக்கு தெரியாத ரகசியமாகும்.

 எனவே கருணைக்கிழங்கை தினமும் உணவில் சேர்த்து உடலை வலுப்படுத்துங்கள்.
 நலமாக வாழுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை