உணவைப்போல வாழ வேண்டும்

உணவைப்போல வாழ வேண்டும்

இட்லி மாதிரி பளிச்சுன்னு சிரிச்சுக்கிட்டே இருக்க வேண்டும் .
புரட்டி போட்டாலும் தோசை மாதிரி பொறுமையாக இருக்க வேண்டும்.
 உள்ள ஒன்னும் இல்லாவிட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியிலே உப்பி இருக்க வேண்டும் .
ஓட்டை விழுந்தாலும் வடை போல கவர்ச்சியாக இருக்க வேண்டும்.
 உப்புமா மாதிரி அவசரத்திற்கு கை கொடுக்க வேண்டும்.
 பொங்கல் மாதிரி குழைவா பேச வேண்டும்.
 அடிச்சு, துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்க வேண்டும்.

 சைவ பிரியாணி மாதிரி ஸ்டாராக இருக்கணும்.
 ஜிலேபி மாதிரி சுத்தி வளச்சு பேசக்கூடாது.
 நூடுல்ஸ் மாதிரி சிக்கலா இருக்கக் கூடாது.
 பீசா மாதிரி இழுப்பறியா இருக்கக்கூடாது.
 ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்கக் கூடாது.
 புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது .
கேசரி மாதிரி இனிமையா பேச வேண்டும்.
 பாயாசம் மாதிரி விசேஷமாக இருக்க வேண்டும்.
 அப்பளம் மாதிரி ஆறுதலாக இருக்க வேண்டும்.
 அவியல் மாதிரி ஒற்றுமையாக இருக்க வேண்டும் .
ஃப்ரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்க வேண்டும்.
 ஐஸ்கிரீம் மாதிரி எப்பவும் கூலா இருக்க வேண்டும் .
டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்க வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை