வியர்க்குரு பிரச்சனையை தடுப்பது எப்படி?

வியர்க்குரு பிரச்சனையை தடுப்பது எப்படி? 

வியர்வை சுரப்பிகள் அடைப்படுவதால் உண்டாகிறது.

 வெப்பமண்டல காலநிலை இறுக்கமான உடைகளை அணிவது போன்றவைகளால் அழுக்கு சேர்ந்து வியர்வை சுரப்பிகள் அடைபடுவதை தூண்டுகின்றன.

 இறந்த தோல் செல்கள் ஸ்டெஃபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் போன்ற பாக்டீரியாக்களால் அடைப்பு ஏற்படுகிறது.

 குறிப்பாக குழந்தைகளின் வியர்வை சுரப்பிகள் சரிவர வளர்ச்சி அடைந்திருக்காது .ஆகையால் எளிதில் அடைபட்டு விடுகின்றன .

தொடர்ந்து வெயிலில் இருக்கும் போது வியர்வை உண்டாகிறது .

ஆனால் வியர்வை சுரப்பிகள் அடிபட்டு இருப்பதால் வியர்வை வெளிவர முடியாமல் போகிறது.

 எனவே வியர்வை சுரப்பிகளில் இருந்து உடலுக்குள்ளே கசிய துவங்குகின்றது.

 இது நோய் எதிர்ப்பு செல்களை தூண்டுகிறது. எனவே தான் குத்துவது போன்ற வலி கொப்பளங்கள் ஆகியவை உண்டாகின்றன.

 மேலும் இந்த வியர் குரூ பிரச்சினைகள் குழந்தைகள் மற்றும் பெண்களில் தான் ஆண்களை காட்டிலும் அதிகம் உண்டாகின்றன .

இயற்கையாகவே குழந்தைகள், பெண்களின் சருமம் ஆண்களின் சருமத்தை காட்டிலும் மென்மையாக இருப்பதே இதற்கு காரணம் .

படிக வியர்க்குரு, சிவப்பு வியர்க்குரு, உட்புற வியர்க்குரு, சீல் வியர்க்குரு என வகைகள் உண்டு.

 படிகம் மற்றும் சிவப்பு வியக்குருகளுக்கு குளிர்ந்த நீர், குளியல் பவுடர்கள் போன்றவை மூலமே சரி செய்யலாம் .

ஆனால் உட்புற வியர் குருகளுக்கு நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.

 மருத்துவம் 

வியர்வை உண்டாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவது தவிர்க்கப்பட வேண்டும் .

நல்ல காற்றோட்டமான பருத்தி இலையிலான ஆடைகள் நல்லது.

 குளிர்ந்த நீர் குளியல் இதமாக இருக்கும் .

ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் வியர் குரு பொடிகள் நல்ல பலன் அளிக்கக் கூடியவையே.

 அவற்றில் மென்தால் மற்றும் நுண்ணுயிர் கொல்லிகள் போன்றவை கலந்திருக்கும் .
கொப்பளங்கள் வெடித்து நீர் வடிதல் சீல் வைத்தல் போன்றவை ஏற்படுமாயின் மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.

2 கருத்துகள்

புதியது பழையவை