உடல் பருமன் குறைய வேண்டுமா?

உடல் பருமன் குறைய வேண்டுமா?

இஞ்சி சாறை கொதிக்க வைத்து அதில் அதே அளவு தேனை ஊற்றி ஆறியபின்  தினசரி உணவுக்குப் பின் சாப்பிட்டு வர பருத்த உடல் விரைவில் குறையும்.

 தினமும் முருங்கை இலை சாறு, ரெண்டு ஸ்பூன் காலை, மாலை சாப்பிட உடல் எடை குறையும் .

ஐந்து பூண்டுப்பற்களை பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வந்தால் உடல் பருமன், தொப்பை, கொழுப்பு கட்டிகள் குறையும் .

பானை போன்ற வயிறு உள்ளோர்கள் வாழைத்தண்டு சாறு எடுத்து அவ்வப்போது அருந்தி வந்தால் நாளடைவில் வயிறு சுருங்கும்.

 சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சமைத்து சாப்பிட்டால் தொப்பை குறையும்.

 பொன்னாவரை கீரையின் விதைகளை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் அதிக வியர்வை உண்டாக்கி அதன் மூலம் நீர் மலம், சிறுநீர் வழியாக வெளிப்படுத்தப்பட்டு உடல் பருமன் குறைய தொடங்கும்.

 பப்பாளி காயை அவ்வப்போது சமைத்து உண்டு வந்தால் தடித்த உடல் குறையும்.

 அருகம்புல் சாறு, பூசணி சாறு ஏதாவது ஒன்று குடித்து வர உடல் பெருக்கம் தானாகவே குறையும். உடலும் அழகு பெறும்.
 தினசரி காலை பல் துலக்கியதும் ஒன்றரை ஸ்பூன் தேனை சூடான வெந்நீரில் கலந்து குடித்தால் விரைவில் உடல் எடை குறையும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை