செரிமானத்தை எளிதாக்கும் உணவுகள்
இஞ்சி செரிமானத்துக்கு முக்கியமானவை.
இஞ்சியில் செரிமான அமிலம், கல்லீரல் சுரக்கும்.
இது வயிற்றில் செரிமான அமிலமாக உணவை கரைக்கும் போது உணவு குழாயில் ஏற்படும் வாயு, வயிறு குடல் உணவுகள் குழாயில் தேங்க விடாமல் ஏப்பம் மூலமாக வெளியேறும்.
இஞ்சி கலந்த வெந்நீரை தினமும் காலை மாலை இருவேளையும் குடிக்கலாம்.
சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம்.
இதனால் செரிமானம் ஏற்படும்.
புதினா
செரிமான கோளாறுகளை சரி செய்யும்.
புதினாவை அசைவ உணவுகள், ரசம் ஆகியவற்றில் செரிமானத்தை எளிதாக்க அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
வயிற்றுக்கும் உணவு குழாய்க்கும் இடையில் உள்ள ஸ்ப்ங்டர் சதையை ரிலாக்ஸ் செய்து சாப்பிட்ட உடன் மலம் கழிக்க தூண்டும் .
மலக்குடலில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலை போக்க உதவும்.
இது வாயு பிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு, ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் உணவு எளிதில் செரிமானம் ஆகும் .
இலவங்கம்
இதை சமையலில் சுவை, வாசனைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதிலுள்ள ஆன்டிஆக்சிடென்ட்கள் செரிமானத்துக்கு உதவுகிறது.
வாயுவின் அளவை மட்டுப்படுத்தும்.
வயிற்று உப்புசம், குமட்டல் உணர்வு நீங்கும் .
ஓமம்
இது அசிடிட்டி, செரிமான கோளாறு ஆகியவற்றை போக்கும்.
ஓமம் செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது.
தினமும் அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அரை டம்ளர் ஆகும் வரை சூடாக்கி தினமும் காலை மாலை இருவேளை பருகி வந்தால் வயிறு மந்தம் சரியாகும்.
சீரகம்
இரும்பு, கால்சியம், பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது.
பிரியாணி போன்ற ரெசிபிகளில் இதை சேர்ப்பதால் சுவை, மணம் செரிமானம் எளிதாக்கும்.
இரப்பை அலர்ஜியை சரி செய்யும்.
மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தை போக்கும்.
வெந்தயம்
இதில் வைட்டமின் ஏ, சி, கே, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், போலிக் அமிலம் உள்ளது.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
நார்ச்சத்துக்களும் உள்ளது.
அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும்.
நீரழிவு பிரச்சனை உள்ளவர்கள் வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம்.