அயோடியன் அவசியமா?

அயோடியன் அவசியமா?
 அயோடியன் என்பது நம்முடைய உடம்புக்கு தேவையான நுண்ணிய உயிர்ச்சத்து இதை ஆங்கிலத்தில் மைக்ரோ நியூட்ரின்ட் என்று அழைக்கிறார்கள்.

 பொதுவாக ஆண், பெண் யாராக இருந்தாலும் சரி ஒரு நாளைக்கு 120 முதல் 150 மைக்ரோ கிராம் அளவுக்கு அயோடியன் தேவை .

ஒவ்வொரு மனிதனின் தொண்டை பகுதியில் உள்ள தைராய்டு எனப்படும் நாளமில்லா சுரப்பியானது தைராக்ஸின் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது.

 இந்த ஹார்மோன் ரத்தத்தில் கலந்து நம் உடலில் உள்ள அனைத்து திசுக்களையும், மூளையையும் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

 இதற்கு அயோடியன் தேவை.

 தைராக்ஸின், ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தால் குழந்தைகள் குள்ளமாக இருப்பதோடு அறிவுத்திறன் குறைந்து, காது கேளாண்மை, மந்தமான போக்கு போன்ற குறைபாடுகளும் ஏற்படும்.

 இப்படிப்பட்ட குழந்தைகளை க்ரெடினிஸம் கிட்ஸ் என்று அழைக்கிறார்கள்.

 தினமும் ஒரு தீக்குச்சி தலையளவு அயோக்கியன் கிடைத்தால் நம் உடம்புக்கு போதுமானது.

 நாம் சாப்பிடும் காய்கறிகளிலும், கடல் உணவிலும் தேவையான அளவு அயோடின் கலந்துள்ளது.
 அயோடின் ஒரு சின்ன விஷயம் தான் ஆனால் ஆரோக்கியத்தின் மிகப்பெரிய அடையாளம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை