தாஜ்மஹாலின் கட்டிடக்கலை

தாஜ்மஹாலின் கட்டிடக்கலை

தாஜ்மஹால் கட்டிடக்கலை உலகிலேயே பிரம்மாண்டமான கட்டிடக்கலைகளில் சிறந்தவர்களை ஆக்ராவிற்கு வரவழைத்து 37 நபரை மஹாலின் வரைபடம் வரையச் செய்தார்.

 அப்போது அவர் கட்டிடக்கலைனரிடம் நிபந்தனையும் விதித்தார்.

அது என்னவென்றால் தாஜ்மஹால் மும்தாஜின் குணம், அழகு போன்றவற்றை பறை சாற்றும் படி இருக்க வேண்டும் என கூறி கட்டிட கலைஞரிடம் சிறப்பாக கட்டிடம் அமைய வேண்டும் என்று கூறினார் ஷாஜகான்.

 இந்த கட்டிடக்கலை வல்லுனர்கள் கட்டிடக்கலை மட்டுமின்றி வானிலை பற்றியும் தெரிந்தவர்கள்.

 இவர்கள் கால நிலைக்கு ஏற்றபடி கட்டிடங்கள் கட்டுவர்.

 அதன்படி ஆக்ராவில் தாஜ்மஹால் கட்டுவதற்கு ஏற்ற இடமா? சரியான காலநிலையும், யமுனை நதிக்கரையில் கட்டலாமா? என பலவற்றை ஆராய்ந்த பிறகு தான் கட்டவே ஆரம்பித்தனர்.

 இந்த ஆக்ராக் கரையில் ஒரு இடத்தில் ஆழமாக தோண்டப்பட்டு மரத்தூண்கள் அடியில் மிகவும் கடினமாக இருக்கும்படி யமுனை ஆற்றின் உப்பை தாங்கும் அளவிற்கு கடினமான தூண்களை அடியில் வைத்தனர்.

 இதனுடன் சில கற்களை வைத்தனர்:

 இது எதற்கு என்றால் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தாலும் தாஜ்மஹால் ஒன்றும் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக.

 தாஜ்மஹால் அடியில் கடினமான தூண்களை வைத்துள்ளனர்.

 இதற்குமேல் தான் தாஜ்மஹால் தளம் அமைக்கப்படுகிறது.

 இந்த தாஜ்மஹால் வெண்மையாக இருக்க காரணம் இது மும்தாஜின் குணத்தை பிரதிபலிக்கும் வகையிலும், அழகை பிரதிபலிக்கும் வகையிலும் உலகின் பல இடங்களில் இருந்தும் விலை மதிப்பில்லாத கற்கள் வரவழைக்கப்பட்டது.

 இதில் சீனா, ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளில் இருந்து பல வண்ண கற்கள் வரவழைக்கப்பட்டது.

 இந்த வர்த்தகத்திற்கு ஆயிரக்கணக்கில் குதிரைகள், யானைகள் போன்றவற்றை பயன்படுத்தினர்.

 தாஜ்மஹால் கட்டுவதற்கு பல கற்கள் பயன்படுத்தினர்.

இதில் பூக்கள் போன்ற பளிங்கு கற்கள் தாஜ்மஹால் சுவர்களில் பொறிக்கப்பட்டிருக்கும் .

இந்த பூக்களை செதுக்க இத்தாலியில் உள்ள கலை வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர் .

இந்த தாஜ்மஹாலில் வெளிப்புறத்தில் நான்கு தூண்கள் கட்டப்பட்டுள்ளது.

 இந்த நான்கு தூண்கள் வெளிப்புறமாக சாய்ந்தது போல் காணப்படும் .

இது ஏன் இவ்வாறு கட்டப்பட்டுள்ளது என்றால் இயற்கை சீற்றத்தால் இந்த தூண் தாஜ்மஹால் மீது விழாமல் இருக்க வெளிப்புறம் சாய்ந்த மாதிரி கட்டப்பட்டுள்ளது.

 இதன் மையத்தில் ஒரு தங்க கோபுரமும் வைக்கப்பட்டுள்ளது .
இந்த தாஜ்மஹால் 1653 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

1 கருத்துகள்

புதியது பழையவை