புதினாவின் பெருமைகள்
புதினா கீரையை பல வகைகளில் சமைத்து சாப்பிடுகிறோம்.
அதற்கு வேறு சில தன்மைகளும் உண்டு அவற்றைப் பார்ப்போம் .
இஞ்சி, மிளகுடன் புதினாவை வறுத்து, நீர் சேர்த்து சுண்ட காய்ச்சி தேவைக்கு ஏற்ப பணவெல்லாம் கலந்து சாப்பிட வயிற்று குமட்டல் தீரும்.
புதினாவை உலர்த்தி பொடித்து உப்பு கலந்து பல் வலியுள்ள இடத்தில் தேய்த்தால் வலி குறையும்.
புதினாவுடன் இஞ்சி சேர்த்து சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
துவையல் செய்யும் போது இஞ்சி சேர்த்து அரைக்கலாம்.
கீரையை வேகவைத்து நீரை வடிகட்டி எலுமிச்சை சாறு, உப்பு கலந்து குடித்து வந்தால் பித்தம் தீரும்.
நீர் விட்டு கொதிக்க வைத்து நீரை வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தால் குரல் வளம் பெறும்.
தேன், எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலை விழுதை கலந்து சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
சிறுநீர் எரிச்சல் தீரும்.
புதினா இஞ்சி, மிளகு, சீரகம், கருவேப்பிலை, பிரண்டை துளிர், புளி எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து வறுத்த உளுந்தம் பருப்பு, உப்பு சேர்த்து துவையலாக சாப்பிட்டு வர அஜீரணக் கோளாறு தீரும்.
புதிதாவையும், கருவேப்பிலையும் நல்லெண்ணையில் வதக்கி புளி, வறுத்த உளுந்தம் பருப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
புதினாவை கசக்கி ஓட்ஸ் உடன் கலந்து முகப்பரு மீது வைத்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரால் கழுவி வந்தால் பருக்கள் மறையும்.
துவையல், வெஜிடபிள் பிரியாணி மட்டுமில்லாமல் ரசம் செய்தால் சுவையாக இருக்கும் .
பல மருத்துவ குணங்கள் கொண்ட புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்து பலன் பெறலாம்.