முகப்பொலிவுத்தரும் தேங்காய் பூ
என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் பாரம்பரிய இயற்கை உணவுகளுக்கும் மவுசு பெருகி வருகிறது.
அந்த வகையில் தற்போது அதிகம் காணப்படுவது சாலையோரங்களில் தேங்காய் பூ வியாபாரம் தான்.
இதை பொதுமக்கள் அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
அப்படி என்னதான் இந்த தேங்காய் பூவில் இருக்கிறது .
தேங்காய் பூ என்பது தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சியே ஆகும்.
தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர் தான் தேங்காய் பூ வாய் மாறுகிறது.
முதலில் ஒரு சாக்கு பையில் சிறிது மண் அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதன் உள்ளே தேங்காயை காற்று படாதவாறு வைக்க வேண்டும்.
மூன்று மாதங்கள் அதை திறக்காமல் அப்படியே விட்டு விட வேண்டும் .
பிறகு அதை இரு துண்டுகளாக பிரித்து பார்த்தால் தேங்காய் உள்ளே முழுவதும் தேங்காய் பூ உருவாகி இருக்கும்.
இதை தேங்காய் முட்டை என்றும் சொல்வதுண்டு .
ஏனென்றால் இதில் சுவையும் ஆரோக்கியமும் அதிகமாக இருக்கிறது.
தேங்காய் பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் உள்ளது.
தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.
பூ சாப்பிடலாம் அதில் உள்ள தண்ணீர் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
தேங்காய் பூவில் முக்கியமாக நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் அதிகமாக இருக்கிறது .இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது .
நீர்ச்சத்தால் நம் உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது.
தேங்காய் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களிலும் லினோலெனிக் அமிலம் இருக்கிறது.
இது ஆன்டி ஆக்சிடென்ட் மட்டுமல்லாமல் நம் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஒரு கலவையாக இருக்கும்.
கோடை காலங்களில் நமக்கு ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் ஒன்று சிறுநீரக கல் பாதிப்பு .
இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் பாதிப்பிலிருந்து தடுக்கலாம்.
இந்த தேங்காய் பூ சிறுநீரக நோய் மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது.
தேங்காய் பூவை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் நம் இளமையை பராமரிக்கவும் உதவும்.
இது செலினியம் அதிகமாக இருப்பதால் முகப்பொலிவுக்கும், அழகாக இருப்பதற்கும் உதவுகிறது.
கொழுப்பு சேராமல் உடல் எடையை குறைய உதவுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
எனவே தேங்காய் பூ சாப்பிட்டு உடல் நலனை பேணலாமே.