கூந்தல் பராமரிப்பு டிப்ஸ் செய்து பாருங்க லேடீஸ்

கூந்தல் பராமரிப்பு டிப்ஸ் 
செய்து பாருங்க லேடீஸ்
முடி பளபளப்பாக இருக்க வேண்டுமா? 

உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு முட்டையினை உடைத்து ஊற்றி கூந்தலின் வேர்கால்களில் தடவி 20 நிமிடங்கள் உறவிடவும். பிறகு ஷாம்பு போட்டு தலையை அலச பளபளப்பான மின்னும் கூந்தல் உங்களுடையது ஆகிவிடும்.

 எலுமிச்சை சாறுடன் ஆலிவ் ஆயிலை சேர்த்து தலை முடியிலும், வேர்களிலும் தடவி கால் மணி நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகு தொல்லை முற்றிலும் போய்விடும் .அரிப்பும் ஏற்படாது .

கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அதனுடன் பாசிப்பருப்பு மாவை கலந்து கூந்தலில் தேய்க்கவும். கால் மணி நேரம் கழித்து கூந்தலை அலசவும். முடி உதிர்தல் நிற்கும் .

சின்ன வெங்காயத்தின் சாறை அரைத்து எடுத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்தால் முடி உதிர்வது குறையும் .

செம்பருத்தி பூவை வெயிலில் உலர வைத்து பொடியாக்கவும் .இதை தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது. அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

 முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது நிற்கும்.

 வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பார்க்கவும் முடி கொட்டுவது நின்று விடும். அது மட்டுமல்ல நரை விழுவதையும் இது தடுக்கும் .கருகருவென முடி வளர தொடங்கும்.
 சோற்றுக்கற்றாழை சாரில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகவும் நன்றாகவும் வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகவும்,

கருத்துரையிடுக

புதியது பழையவை