கருப்பைக்கு பலன் தரும் கருப்பட்டி

கருப்பைக்கு பலன் தரும் கருப்பட்டி
பனங்கருப்பட்டியின் மருத்துவப் பயன்கள் அளவில்லாதது.

 சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி.

 பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.

 இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

 வைட்டமின் பி மற்றும் அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

 பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

 நார்ச்சத்தும் இதில் அதிகம் கருப்பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சி அடைய செய்யும்.

 அதில் உள்ள கிளை சீமிக இன்டெக்ஸ் உடலில் கலக்கும் சர்க்கரையளவு வெள்ளை சர்க்கரையை விட குறைவு.

 சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம் .

அதில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.

 சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும் .

ஓமத்தை கருப்பட்டி உடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.

 நீரிழிவு நோய்கள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

 சுக்கு, கருப்பட்டி பெண்களின் கர்ப்பபைக்கு மிகவும் ஏற்றது.

 குழந்தை பெற்ற பெண்கள் சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.
 கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பையும் உடல் இயக்கத்தையும், சீரான சக்தியையும் சமநிலையில் வைக்கிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை