இரைப்பை கேஸ்டிரிக் பிரச்சனையா? கவலை வேண்டாம்
அல்சர் அல்லது அசிடிட்டி ஆரம்பக் காரணிகள் என்ன
முதலும் முக்கிய காரணம் காலை உணவு தவிர்ப்பது தான்.
அதனுடைய பெயரே பிரேக் பாஸ்ட் அதாவது ஒரு பெரிய இடைவெளியான ஏழு முதல் 10 மணி நேரம் சாப்பிடாமல் விரதம் போல தான் இருப்போம்.
அதை உடைக்கிறது தான் பிரேக் பாஸ்ட்.
வயிற்றுக்குள் ஆசிட் உருவாகும் அந்த நேரத்திலே உணவு வயித்திலே இல்லாமல் இருந்தால் ஆசிட் உங்கள் குடலை, செரிமான உறுப்புகளை பாதித்து அல்சர் புண் ஏற்படும்.
அடுத்து வெளிப்புற உணவு அதிக காரம், மசாலா, ஏதோ எண்ணெய், சுகாதாரமற்ற உணவு.
இதெல்லாம் ஒரு காரணம் அடுத்து பெரிய காரணிகள் தூக்கமின்மை, மன உளைச்சல், சாப்பிட்ட உடனே குறைந்தது இரண்டு மணி நேரம் இடைவெளி கூட இல்லாமல் உடன் படுப்பது.
அல்சர் மற்றும் அசிடிட்டி பிரச்சனையை எப்படி ஆரம்பத்திலேயே கண்டறிவது
முதலில் வயிற்றில் எரிச்சல், மெதுவாக நெஞ்சு எரிச்சல், ஏப்பம், வயிறு நிறைந்த தன்மை என ஆரம்பித்து பிறகு அல்சர், ரத்த வாந்தி, குடல் அடைப்பு, கேன்சர் என்று முடியும்.
இதற்கு பெரிய அளவில் வயது வித்தியாசமே கிடையாது.
H.Pylori கிருமி தாக்கமும் இருக்கலாம்.
சரியான அளவில் சாப்பாடு, சீரான தூக்கம் இல்லாத பலருக்கும் அல்சர் வர வாய்ப்பு உண்டு.
அசிடிட்டிக்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன
முதலில் எதற்கும் தானாகவே மருந்து எடுத்துக் கொள்வது தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பிரச்சனைகளும் நோயாளிகளின் தன்மையையும், தீவிரமும் பொறுத்து மனிதர்களுக்கு மனிதர் மாறுபடும்.
ஆரம்பகட்டத்திலேயே வரும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு பழக்கங்களில் மாற்றங்கள் செய்வது, பழங்கள் அதிகம் உட்கொள்வது மற்றும் சில மருந்துகள் மூலமாகவே குணப்படுத்தலாம்.
வெறும் மருந்துகள் மூலமாக அல்லது உணவு பழக்கங்களை மாற்றுவதன் மூலமே குணப்படுத்தலாம்.
பிரச்சனை பெரிதாக இருக்கும் பட்சத்தில் தான் 45 வயதை கடந்தவராயின் எண்டோஸ்கோப்பி மூலம் நோயின் வீரியம் ஆராய்ந்து அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும்.