எளிய மருத்துவம்

எளிய மருத்துவம் 
1.வாழைத்தண்டை இரண்டாக வெட்டி கொசு கடித்த தடிப்புகளில் தடவினால் வீக்கம் சில நிமிடங்களில் சரியாகும்.

2. தக்காளியும், பீட்ரூட்டும் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும்.

3. வயிற்றில் கடுப்பு நீங்க வெந்தயத்தை நன்றாக அரைத்து, தயிரில் கலந்து கொடுத்தால் போதும்.

4. வாந்தி எடுப்பதை நிறுத்த சிறிது சீரகம் வாயில் போட்டால் வாந்தி வருவது நிற்கும்.

5. கோடைகாலத்தில் உணவில் புளிப்பும், காரமும் குறைவாக சேர்த்தால் அல்சர் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம்.

7. முட்டைக்கோசை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நெஞ்சு வலி வராது .
அடிக்கடி சளி தொந்தரவும் வராது.

8. துளசி இலை, தும்பையிலை, கார வெற்றிலை, மிளகு ஆகியவற்றை கசாயம் செய்து காலையில் எழுந்ததும் குடியுங்கள். மார்புச்சளி வெளியேறும்.

9. தினசரி ஒரு சின்ன வெங்காயத்தை தோலை உரித்து விட்டு பச்சையாக தின்னுங்கள் வாய் நாற்றம் போகும். ரத்தம் சுத்தமாகும். உடலில் பளபளப்பு ஏற்படும். இருமல் சளி போன்ற தொந்தரவுகள் தடுக்கப்படும்.
 உடல் ஆரோக்கியம் பெருகும்.

10. வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்

கருத்துரையிடுக

புதியது பழையவை