கோடையை குளுமையாக்கலாம்

கோடையை குளுமையாக்கலாம் 
கோடையில் தக்காளி நிறைய சாப்பிடவும் .

உடம்பை குளுமையாகவும் வைத்திருக்க தக்காளி உதவுகிறது.

 வீட்டிற்குள் பச்சை நிற மணி பிளான்ட் செடி வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

 வெளியே செல்லும்போது நல்ல தரமான கூலிங் கிளாஸ் அணியலாம்.

 வெந்தயத்தை மோரில் ஊற வைத்து மைய அரைத்து தலைக்கு பூசி குளித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

 உணவில் பச்சை வெங்காயம், வெள்ளரி, வாழைத்தண்டு, மோர், புதினா ஆகியவற்றை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 சந்தனத்தை பன்னீரில் குலைத்து தினமும் இரவு படுக்கும் முன் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வேர்க்குரு உள்ள இடத்தில் பூசவும் .

மோரில் சிறிது இஞ்சி, மிளகாய், உப்பு, கொத்தமல்லி தழை போட்டு குடிக்கலாம்.

 காபி, பால் போன்றவற்றை குறைத்து நீர் ஆகாரம் இளநீர், பழச்சாறு பருக வேண்டும்.

 தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 பருத்தி ஆடைகளே அணிய வேண்டும்.

 மருந்தாணி பூவை இரவில் தலையணையின் கீழ் வைத்து படுத்தால் உடல் வெப்பம் குறையும்.

 வெளியே கிளம்பும்போது நெல்லிக்காய் ஒன்றினை வாயில் போட்டு மென்றால் நாக்கு உலர்ந்து போகாது.
 கீரை, நீர்ச்சத்துள்ள காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை