குளிர்சாதன பெட்டிக்கு குளு குளு டிப்ஸ்
ஃப்ரிட்ஜை சமையலறையில் வைக்கக்கூடாது.
புகைப்பட்டால் கலர் போய்விடும்.
பின்பக்கம் உள்ள கம்பி வளைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது .
அந்த வலையில் தண்ணீர் படக்கூடாது.
பின்புறம் படியும் ஓட்டையை மெதுவாக தென்னந் துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும் .
ஃபிரிட்ஜை துடைக்கும் போது ஈர துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றை கொண்டு துடைக்க கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடிக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்கவில்லை எனில் கத்தியை கொண்டு குத்த கூடாது .
அதற்கு பதில் ஒரு பழைய காஸ் கட்டை போட்டு அதன் மேல் வைத்தாலே அல்லது சிறிது கல் உப்பை தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுகளை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
ஃப்ரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும்போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது .
பச்சை காய்கறிகளை பாலித்தீன் கவர்களில் போட்டு வைக்கவும்.
பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.
பச்சை மிளகாய் வைக்கும் போது அதன் காம்பை எடுத்து விட்டு தான் வைக்க வேண்டும் .
பிரிட்ஜில் வைக்கும் உணவுப்பொருட்களை மூடி வைக்க வேண்டும் .
துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
பிரிட்ஜில் காய்கறி ட்ரேயில் மீது ஒரு கெட்டி துணி விரித்து பச்சை காய்கறிகளை போட்டு பாதுகாத்தால் வெகு நாள் அழுகி போகாமல் இருக்கும்.
சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் பிரஸ் ஆக இருக்கும்.