உலகின் ஆச்சரியமான ஆறுகள்
இயற்கையாக உருவான நீரோடைகள்தான் ஆறுகள். .
பொதுவாக ஆறுகள் மலைப்பிரதேசங்களில் இருந்து உருவாகின்றன.
மனித வாழ்வும், ஆறுகளும் பின்னி பிணைந்தவை.
மனித இனம் தோன்றியதே ஆறுகளின் கரையோரம் தான் என்பது வரலாற்று உண்மை .
ஆதிகால முதலே ஆற்றங்கரையில் மனிதனின் நாகரீகம் வளர்ந்துள்ளது.
பூமியில் 165 பெரிய ஆறுகள் உள்ளன என கண்டறிந்து உள்ளனர்.
உலகின் நீளமான ஆறு நைல் நதி.
இது 6650 km நீளம் 4132 மையில் கொண்டது.
மிக நீளமான இந்த நைல் நதி 11 நாடுகளை கடந்து செல்கிறது.
இது ஆப்பிரிக்காவின் வட கிழக்கு பகுதியில் உள்ளது.
நைல் நதியானது வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இரண்டு துணை ஆறுகளை கொண்டுள்ளது.
எகிப்து நாட்டின் பண்டைய கால குடி யேற்றங்கள் நைல் நதிக்கரையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் உள்ள அனைத்து நதிகளும் நில நடு கோட்டை நோக்கி பாயும் போது நைல் நதி மட்டுமே நிலநடுக்கோட்டிற்கு எதிர் திசையில் பாய்கிறது.
அமேசான் ஆறு
தென் அமெரிக்காவில் அமேசான் காடுகள் வழியாக பாய்கின்றன.
உலகின் இரண்டாவது மிக நீளமான ஆறு இதுவாகும் .
6400 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
பரப்பளவில் உலகில் மிகப்பெரிய ஆற்று படுகை கொண்டது.
இதில் 1100 கிளை ஆறுகள் கலக்கின்றன.
அவற்றில் 10 ஆறுகள் உலகின் மிகப்பெரிய ஆறுகள் ஆகும்.
இதன் அகலம் இரண்டு கிலோமீட்டர்.
மழைக்காலத்தில் சில இடங்களில் ஆறு கிலோமீட்டர் வரை இருக்கும்.
சாதாரணமாக கண்ணிமைக்கும் நேரத்தில் 70 கியூபிக் தண்ணீர் இதில் ஓடுகிறது.
இது மழை காடுகள் நதி என்று அழைக்கப்படுகிறது.
உலகின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது பெரும் பங்கு வகிக்கிறது .
உலகில் உள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்கு வாழ்வது குறிப்பிடத்தக்கது.
ஒன்பது நாடுகளை கடந்து செல்லும் இந்த ஆற்றின் குறுக்கே எந்த பாலமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.