நெய் காபி Vs நெய் டீ
காலையிலிருந்து சிறந்தது எது
பிளாக் டீ அல்லது கிரீன் டீயில் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து அருந்துவது நெய் டீ ஆகும் .
இது பாரம்பரிய திபெத்திய வெண்ணை டீ போடுவது போலவே பின்பற்றப்படுகிறது .
டீயில் வெண்ணெய் சிறிதளவு, உப்பு சேர்த்து திபெத்தியர்கள் பாரம்பரிய வெண்ணெய் டீயை தயாரிக்கின்றனர்.
இதனால் டீ கிரிமியாகவும் அதிக ஆரோக்கியமான கொழுப்புகளையும் கொண்டிருக்கும் .
இவ்வாறு காலையில் நெய் டீ அருந்துவது இதய சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யவும், காயங்களை ஆற்றவும், சரும ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
நெய் டீயில் ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளதால் செரிமான ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது.
நெய்யில் Butyrate இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மேலும் குடல் இயக்கத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
நெய்யில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கு உதவுகிறது .
அது மட்டுமில்லாமல் மாதவிடாய் முறையில் வருவதற்கும் உதவுகிறது.
நெய்யில் உள்ள Butyric acid மற்றும் triglycerides கொழுப்பை கரைக்க உதவுகிறது .
உடலில் நல்ல கொழுப்புகள் அதிகரிக்க வழிவகுக்கிறது.
பிளாக் டீயில் உள்ள polyphenol அலர்ஜி எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது .
நெய் காபி செய்வதற்கு பிளாக் காபியில் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் சேர்க்க வேண்டும்.
இதை காலையில் எடுத்துக் கொள்வதால் மனதிருப்தி மற்றும் அறிவாற்றல் மேம்பட உதவுகிறது.
நெய் காபியில் உள்ள நன்மைகள் என்னவென்றால் நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு Caffein - ஐ மெதுவாக புரிவதால் சீரான சக்தி உடலுக்கு கிடைக்கிறது .
மேலும் நெய்யில் உள்ள Saturated fats காபியுடன் இணையும் போது எச்சரிக்கை, ஒருமுகப்படுத்துதல், மனத்தெளிவு ஆகிய உணர்வுகள் கிடைக்கின்றன.
நெய்யில் உள்ள Butyric acid உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வீக்கத்தை குறைக்கிறது.
நெய்யிலுள்ள கொழுப்பு உணவு உண்ட முழு திருப்தியான உணர்வைத் தருவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நெய் காபி அல்லது நெய் டீ எடுத்துக் கொள்வது ஒருவருடைய தேவையை பொருத்து அமைகிறது.
காலையில் நெய் காபி எடுத்துக் கொள்வது மனத் தெளிவையும், சக்தியையும் கொடுக்கிறது.
மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது .
இதுவே நெய் டீ எடுத்துக் கொள்வதன் மூலம் செரிமானத்துக்கு உதவுவதோடு உடலை ஈரப்பதுமாக வைத்துக் கொள்கிறது.