ஆரோக்கியமான கூந்தல் பெற
அடிக்கடி வெயில் தூசி வெப்பம் என முடி உதிர்தல் இளநரை, பொடுகு, அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை என கூந்தலை பாதிக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
கூந்தல் பிரச்சனைகள் சிலவற்றை எதிர்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் சில இதோ:
முடி உதிர்வு
தேங்காய் பாலை தலையில் அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் முடி உதிர்வது நிற்கும் .
வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கும் வரை செய்ய வேண்டும் .
அதிமதுரத்தை இடித்து எருமை பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.
இள நரை நீங்க
நாட்டு மருந்துகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும் அதை வாங்கி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.
நெல்லியுடன் கரிசலாங்கண்ணி அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வரலாம் .
கடுங்காய்க்கு நரையை அகற்றி கருமையாக்கும் தன்மை உண்டு.
கரிசலாங்கண்ணி சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
சீரகம், வெந்தயம், வால் மிளகு ஆகியவற்றையே சம அளவு எடுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தடவி வந்தாலும் நரை மங்குவது தெரியும் .
பொடுகு நீங்க
வால் மிளகை ஊற வைத்து பால் விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம் .
இதே போல் வசம்பை தண்ணீர் விட்டு அரைத்து தலையில் நன்றாக தேய்த்து ஊற வைக்க வேண்டும் .
பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசி விடவும் .
செம்பட்டை மறைய
முட்டை வெள்ளை கருவை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும் .
இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.
மென்மையான பளபள முடியும் சொந்தமாகும்.