கருப்பு நிறத்தில் பாலா ?
தயிர், பன்னீர் , பாலாடை என அனைத்தும் பால் மூலம் கிடைக்க கூடிய பாெருட்கள்தான் .
அப்படி இந்த அனைத்து பொருட்களுமே வெள்ளை நிறத்தில் தான் இருக்கும் .
பாலில் அதிக கால்சிய சத்து நிறைந்துள்ளது .
இதை பருகுவதன் மூலம் எலும்பு, பற்கள் அனைத்தும் வலுபெறும்.
கால்சிய சத்து இல்லை என்றால் எலும்பு தேய்மானம் அடைந்து விடும்.
இப்படி பல நன்மைகளைக் கொண்ட பால் கருமை நிறம் என்று நினைத்து பார்க்க முடிகிறதா?
இந்த உலகில் ஒரு விலங்கு கருமை நிறத்திலான பாலை கொடுக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அது என்ன விலங்கு, ஏன்? அதன் பால் கருப்பாக உள்ளது என்று பார்ப்போம்.
சமீபத்தில் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு பலருக்கும் விடை தெரியாமல் திணறினார்கள்.
ஏனென்றால் யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்
கருப்பு நிறத்தில் பால் இருக்கிறது என்று இந்த உலகின் அனைத்து பாலூட்டிகள் விலங்குகளும் தங்களது குட்டிகளுக்கு பால் கொடுக்கின்றன.
குறிப்பாக உலகில் சுமார் 6400 பாலூட்டிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
நாய், பூனை முதல் யானை வரை அனைத்தும் பால் கொடுக்கின்றனர்.
இதில் ஆடு, மாடு, ஒட்டகம், கழுதை ஆகிய விலங்குகளின் பாலை மட்டும் மக்களும் பயன்படுத்துகின்றனர்.
அப்படி ஒரு விலங்கு கொடுக்கும் பாலின் நிறம் தான் கருப்பு.
காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் தான் இருக்கும் .
இவை ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகம் என அறியப்படுகின்றன.
மேலும் ஆப்பிரிக்க காண்டாமிருகங்களின் பாலில் 0.2% மாத்திரமே கொழுப்பு காணப்படுகிறது.
இதன் பால் தண்ணீர் போல் கருப்பு நிறத்தில் இருக்கும் .
அது மட்டுமின்றி இவ்வகை கருப்பு காண்டாமிருகங்களால் நான்கு முதல் ஐந்து வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடிவதுடன் அவை ஒரு வருடத்திற்கும் மேலாக கர்ப்ப காலத்தை அனுபவிக்கின்றன.
ஆப்பிரிக்கா காண்டாமிருகங்கள் ஒரு தடவை ஒரு குட்டியை மாத்திரமே போடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரிதாக யாரும் காண்டாமிருகத்தை நேரில் பார்த்திருக்க முடியாது .
சிலர் உயிரியல் பூங்காவில் கூட பார்த்திருக்கலாம் .
அப்படி இந்த விலங்கின் பாலினரும் கருப்பு என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இதுவரை உங்களுக்கும் தெரிந்திருக்காது என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.