பற்கள் பளிச்சென்று இருக்க
அனைவரும் தங்களது பற்கள் பளிச்சென்று இருப்பதை விரும்புவர்.
ஒழுங்காக பற்களை தேய்க்காமல் விட்டால் பல் வலி, ஈறு வீக்கம், சீழ் வடிதல் போன்ற பல தொல்லைகளுடன் துர்நாற்றம் வீசும்.
பற்களை பாதுகாக்க செய்ய வேண்டியவை:
ஈறுகளை முதலில் ஆள்காட்டி விரல்களால் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும் .
இப்படி செய்தால் ரத்தக் கசிவு ஏற்படாது .
எலுமிச்சம் பழ சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் பற்கள் பளிச்சென்று இருக்கும் .
மஞ்சள் நிறம் மாற பொடி உப்பை பயன்படுத்தலாம் .
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புதினா பருப்பு பொடியை வாங்கி தினமும் பல் தேய்த்தாலும் பளீச்சென்று இருக்கும்.
கிராமை எடுத்து வாயில் போட்டு மென்றால் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
சாப்பிட்டவுடன் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால் சாப்பிட்ட கரை நீக்குவதுடன் பற்களும் பளிச்சென்று மாறும்.