இளமையை தக்க வைக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்

இளமையை தக்க வைக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்


 தூக்கத்தை குறைப்பது

 சிலர் வேலை பொறுப்பு எனக் கூறி தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

 தற்போது இரவில் செல்போன், கணினியில் நேரத்தை கழிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது .

இவ்வாறு தூக்கத்தை குறைப்பது பல்வேறு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

 தூக்கமின்மையானது உடலின் இயற்கையான பழுதுபார்க்கும் செயல்முறைகளை சீர்குலைக்கிறது.

 சருமத்தின் நிகழ்ச்சி தன்மையை இழக்கச் செய்யும்.

 மன அழுத்த ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதற்கும் வழிபடுகிறது.

 கூடுதலாக இது நச்சுக்களை எதிர்த்து போராடும் உடலின் திறனை பலவீனப்படுத்துகிறது .

எனவே தினமும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம் .

உடற்பயிற்சி இல்லாமை

உடற்பயிற்சி, உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது .

இதன் விளைவாக தோல் பிரகாசம் அதிகரிக்கிறது .

வழக்கமான உடற்பயிற்சியானது ஆரோக்கியமான அதிக சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 மாறாக உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரழிவு, இதயம் தொடர்பான நோய்கள் போன்ற பல உடல்நிலை பிரச்சினைகளை உண்டாக்கும் .

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பதால் நமது உடலில் ஏற்படும் தீங்கான விளைவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன .

அதன் விளைவுகள் வயதாகும் செயல்முறைக்கு காரணமாகின்றன.

 மேலும் உடலின் அலர்ஜியின் அளவை உயர்த்துகின்றன.

 சுருக்கங்கள், கோடுகள் மற்றும் மந்தமான நிறத்தை உருவாக்க வழி வகுக்கிறது.

 மது பழக்கம்

அதிகம் மது உட்கொள்வது ஒருவரின் வயதை கூட்டும் .

காரணம் இது சருமத்துக்கு நீர் அழிப்பை உண்டாக்குகிறது.

 வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

 கொலாஜான் உற்பத்தியை குறைக்கிறது .

இந்த காரணிகள் சுருக்கங்கள் மந்த தன்மை மற்றும் சீரற்ற தோல் தன்மை வழிவகுக்கும்.

 சூரிய வெளிச்சத்துக்கு உட்படுதல்

சூரியனின் புற ஊதா கதிர்களுக்கு தொடர்ந்து உட்படுவது நமது சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை அளிக்கிறது.

 இதனால் அது சுருக்கங்கள் தொய்வுகளுக்கு ஆளாகிறது.

 இது மட்டுமில்லாமல் இந்த தீங்கு விளைவிக்கும் கதிர்களை நீண்ட நேரம் எதிர்கொள்வது தோல் புற்றுநோயின் ஆபத்தை கணிசமாக அதிகரிக்கிறது.

 நீரிழப்பு

போதுமான தண்ணீர் குடிப்பது சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் வழி.

 நீர் இழப்பு உயிரியல் முதுமையை விரைவுப்படுத்துவது மட்டுமல்லாமல் நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது .

ஆரோக்கியமான உடலை பராமரிக்க தினமும் குறைந்தது ஏழு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 மன அழுத்தம்

மன அழுத்தம் என்பது முதுமைக்கு ஒரு வேகமான வழியாகும்.

 இது உடல்நல பாதிப்புகளுக்கு அப்பால் சருமத்தை மங்கச் செய்யும்.

 சரும செல்களை முன்கூட்டியே முதிர்ச்சி அடையச் செய்யும் .

எனவே தியானம், யோகா அல்லது பொழுதுபோக்கு மூலம் இளமை பொலிவையும், உயிர் சக்தியையும் அப்படியே வைத்திருக்கலாம்.

 ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் 

ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இழந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை ஏற்றுவதன் மூலம் வயதாகும் வேகத்தை கூட்டும்.

 ஊட்டச்சத்து பற்றாக்குறை

தோலின் வயதை துரிதப்படுத்துகிறது.
 சீரான ஊட்டச்சத்து நிறைந்த உணவை ஏற்றுக் கொள்வது இளமையை காக்கும்.

1 கருத்துகள்

புதியது பழையவை