ஜலதோஷத்தை நீக்கும் முசுமுசுக்கை
முசுமுசுக்கை கீரை சளி மற்றும் இருமல் சம்பந்தமான எல்லா பிரச்சனைகளையும் போக்க வல்லது.
இலைகள் பச்சை நிறமானவை.
தமிழகமெங்கும் வேலிகள், புதர்களில் பெரு மரங்களைச் சுற்றி இதனை காணலாம் .
மருத்துவ பயன் மிக்கவை .
இரும்பல் குணமாக இலையை நிழலில் காய வைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு 120 கிராம் அளவு தூதுவளை இலை தூளுடன் 80 கிராம் அளவு முசுமுசுக்கை கீரையை ஒன்றாக கலந்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதில் அரை தேக்கரண்டி அளவு வெண்ணையில் கலந்து சாப்பிட வேண்டும்.
காச நோய் அவதியுற்றோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும் .
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் குணமாகும்.
இந்தக் கீரை மட்டுமின்றி இதன் கிழங்கை கூட மருத்துவத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
இதுவும் காச மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யக் கூடியது .
முசுமுசுக்கை கீரையை இடித்து சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தலைக்கு எண்ணையாகவும்
பயன்படுத்துகிறார்கள்.
கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலை சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுக வேண்டும் .
வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு ஒரு டம்ளர் நீரில் அந்த பொடியினை அரை தேக்கரண்டி அளவு சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை சுண்ட காட்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
முசுமுசுக்கை கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்தும் சாப்பிடலாம்.
மூன்று பிடி இலைகளை 1/4 கிலோ அரிசி உடன் சேர்த்து அரைத்து மாவாக்கி தோசை செய்து சாப்பிட வேண்டும் .
சளியுடன் கூடிய காய்ச்சல், நாக்கு சுவை இழப்பு ஆகியவை தீரும்.
இதை துவையல் ஆகவும் செய்து சாப்பிடலாம் .
இருமல் , மூக்கடைப்பு போன்றவை குணமாகும்.