கண் நலம் காக்க
கண்களில் அரிப்பு ஏற்பட்டால் அழுத்தவோ, தேய்க்கவோ கூடாது.
மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் கண்களை கழுவலாம். அல்லது இதற்கென்று இருக்கும் திரவத்தையும் பயன்படுத்தலாம்.
கண்களை கூசும் வெளிச்சத்தை தவிர்க்கவும்.
கண்களை பாதுகாக்க தரமான குளிர் கண்ணாடிகளை பயன்படுத்தவும்.
பாடி ஸ்பிரே, ரூம் ஸ்ப்ரே இதர தெளிக்கும் மருந்துகளை பயன்படுத்தும் போது அதன் தெளிக்கும் முனை கண்களுக்கு அருகே இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
கண்களில் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவராக இருந்தால் அதை முறைப்படி பராமரிக்கவும்.
வெயில் கொளுத்தும் நேரத்தில் சூரியனை நேராக பார்க்கக் கூடாது.
புற ஊதா கதிர்களின் தாக்கம் இருக்கும் .
சமைக்கும் போதும் சூடான பொருட்களை கையாளும்போதும் கவனமாக இருக்கவும் .
நீராவி, சூடாக கண்ணில் படக்கூடாது.
நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் கண்கள் உலர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளலாம் .
முறையான கால இடைவெளியில் கண் டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ளவும்.