சீரகம்
சீர் + அகம் = சீரகம்
அகத்தை சீர் செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும்.
உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருட்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைசுற்றல், மயக்கம் நீங்கிவிடும்.
திராட்சை ஜூஸ் உடன் சீரகம் கலந்து பருகி வர ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரை உடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
மோருடன் சீரகம், இஞ்சி சிறிது, உப்பு சேர்த்து பருகினால் வாயு தொல்லை நீங்கும் .
உடலுக்கு குளிர்ச்சியும் தேசத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் போய்விடும்.
ஓமத்துடன் சிறிது சிறுநீரகம் விட்டு கசாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.
சமையலுக்கு சுவையும், மனமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது.
பலவித மசாலா பொடி தயாரிப்பில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
சிறிது சீரகம் நல்ல மிளகு பொடித்து எண்ணையில் இட்டு காய்ச்சி அந்த எண்ணையை தலையில் தேய்த்து குளித்தால் கண் எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல் நீங்கும்.