கைகளுக்கு ஏற்ற வளையல்கள்

கைகளுக்கு ஏற்ற வளையல்கள்
 கைகளில் அழகு, பெண்களின் அழகிற்கு மேலும் மெருகேற்றுவதாக இருக்கும். இதை மனதில் கொண்டு கைகளில் அணியும் வளையல்களை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டால் வனப்பாக வலம் வரலாம்.

 ஆடையின் அமைப்பு, அதன் நிறம் ஆகியவற்றை மனதில் கொண்டு அதற்கு ஏற்ப வளையல்கள் அணிந்து கொண்டால் எளிதாக தோற்றத்தை அளிக்கும் ..

குள்ளமான உடல் அமைப்பு பெற்று பெண்கள் நல்ல பட்டையாக அமைப்புடன் கூடிய வளையல்களையே அணிய வேண்டும்.

 மெல்லிய வளையல்களாக இருந்தால் குறைந்தபட்சம் ஒவ்வொரு கையிலும் இரண்டு வளையல்களை அணிந்தால் தான் பார்வையாக இருக்கும்.

 விதவிதமான கண்ணாடி, பிளாஸ்ட்டிக் வளையல்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன .

இவற்றை வாங்கி அணியலாம்.

 திருமணம் போன்ற குடும்ப விழாக்களில் கலந்துகொள்ள செல்லும்போது தங்கத்தினால் ஆன வளையல்களை அணியலாம். நல்ல கவர்ச்சிகரமாக இருக்கும்.

 அப்படி அணிந்து கொள்ள இயலாதவர்கள் தங்கம் போன்ற தோற்றத்துடன் அமைந்துள்ள பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி வளையல்கள் அணியலாம்.

 உடுத்திக் கொள்ளும் புடவையின் வண்ணத்துக்கு பொருந்தும் வண்ணத்திலும் அணியலாம்.

 கண்ணாடி வளையல்களை அணிந்தால் அது எழுப்பும் கலகலவென்று ஓசையே ஒரு தனி அழகு தான்.

 ஆலயங்களுக்கு செல்லும்போது எளிமையான தோற்றம் உடைய பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி வளையல்களை அணிவது நல்ல தோற்றத்தை கொடுக்கும்.
 மங்களம் தரும் வளையல்களை அணிவோம்!
 வசீகரத்துடன் காட்சி தருவோம்.!

கருத்துரையிடுக

புதியது பழையவை