குளிர்சாதன பெட்டியில் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி ?

குளிர்சாதன பெட்டியில் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி ? 
வீட்டில் எது மீதமானாலும் கொண்டு சேர்க்கும் இடம் குளிர்பதன பெட்டி தான்.

 போகாத குறைக்கு சாக்லேட், பழங்கள் என அப்படியே அரைகுறையாக சாப்பிட்டு வைக்கும் வீட்டு குட்டீஸ்கள் என குளிர் சாதன பெட்டி பராமரிப்புக்கு மட்டும் வாரம் முழுக்க கொடுத்தாலும் போதாது .

இதனால் பிரிட்ஜ் கதவை திறந்ததுமே துர்நாற்றம் அடிக்கும்.

 மேலும் இந்த பலவீனமான பராமரிப்பால் குளிர்சாதன பெட்டியின் ஆயுள் காலமும் குறையும்.

 இதை தவிர்க்கும் எளிய வழிகள் சிலவற்றை காண்போம் :

எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தலாம்.
 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் இரண்டு துண்டுகளாக வெட்டிய எலுமிச்சம் பழத்தை போடுங்கள். பின்னர் அந்த பாத்திரத்தை ஃப்ரிட்ஜில் வைத்திடுங்கள். இப்படி செய்தால் பிரிட்ஜில் துர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும் .

பிரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து அதை கொண்டு ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யவும். இது பிரிட்ஜின் துர்நாற்றத்தை எளிதில் நீக்கிவிடும் .பூஞ்சைகள் தொற்றையும் தவிர்க்கும்.

 காபி கோட்டை பிரிட்ஜின் துர்நாற்றத்தை எளிதில் நீக்கும். காபி கொட்டைகளை ஃப்ரிட்ஜில் வெவ்வேறு மூலைகளில் வைத்து இரவு முழுவதும் மூடி வைத்து காலையில் ஃப்ரிட்சை திறந்தால் துர்நாற்றம் இருக்காது. மேலும் நல்ல நறுமணமும் வீசும்.

 ஃப்ரிட்ஜில் உப்பு போட்டு சுத்தம் செய்யலாம். வெந்நீரில் உப்பு கலந்து அந்த தண்ணீரில் துணியை நனைத்து ஃப்ரிட்ஜை துடைத்து சுத்தம் செய்யலாம் .
ஆரஞ்சு தோல்களை ஃப்ரிட்ஜில் வைத்தாலே போதும் துர்நாற்றம் தானாகவே மறைந்து விடும். ஆனால் அவற்றையும் குறிப்பிட்ட கால நேரத்தில் எடுத்துவிட வேண்டும். இல்லையேல் அவை அழுகி மேலும் பிரிட்ஜை கெடுக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை