வீட்டிற்கு கொசுவலை கதவை தேர்ந்தெடுப்பது எப்படி?

வீட்டிற்கு கொசுவலை கதவை தேர்ந்தெடுப்பது எப்படி?

 மழைக்காலத்தில் கொசுக்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

 சில சமயங்களில் பகல் நேரங்களிலும் கூட கொசு தொல்லை ஏற்படும்.

 கொசுக்கள் பல்வேறு நோய்களை உண்டாக்கும்.

 இதை தவிர்க்க பலரும் படுக்கையை சுற்றி கொசு வலை அமைப்பார்கள்.

 ஆனால் வீட்டின் மற்ற இடங்களில் இருக்கும் போது ஏற்படும் கொசுத்தொல்லையிலிருந்து நம்மால் தப்பிக்க இயலாது .

இவற்றிற்கு சிறந்த தீர்வு வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களுக்கு கொசுவலை கொண்ட கதவை அமைப்பது.

 இவ்வாறு வீட்டில் கொசு கொசுவலை கதவை தேர்ந்தெடுத்த அமைக்கும் போது சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை:

 சொந்த வீட்டில் குடியிருப்பவர்கள் பயன்படுத்தும் கொசுவலை கதவுகளில் எவ்வித மாறுபாடும் ஏற்படாது என்பதால் கொசுவலை கதவை வீட்டின் நுழைவாயிலேயே அமைக்கலாம் .

ஸ்கிரீன் போன்று இல்லாமல் மடக்கக்கூடிய ஸ்லைடிங் டோர் அல்லது திறக்கும் வடிவிலான கிட்டாரில் உள்ளது போல் போன்ற கம்பி அமைப்பு கொண்ட பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் காந்தவியல் லாக் கொண்டு கொசுவலை கதவை அமைக்கலாம் .

இவை கொசுக்களை உள்ளே வராமல் தடுப்பதுடன் வீட்டிற்குள் தூசி வருவதை தடுத்து, வெளிச்சம் மற்றும் காற்று புகுவதை அனுமதிக்கின்றன.

 இவை விலை மலிவானது மற்றும் பயன்படுத்தும் விதமும் எளிதானது.

 வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒவ்வொரு முறை குடியிருக்கும் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலின் அளவுக்கு ஏற்ப கொசுவலையின் அளவை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் .

ஆகையால் கதவு வடிவில் கொசு வலையை அமைப்பது விட தற்காலிகமான கொசுவலை ஸ்கிரீன்களை பயன்படுத்தலாம்.

 மேலும் கதவுகளின் ஓரங்களில் ஆணி அடித்து அல்லது டேப் ஒட்டி கொசுவலைகளை அமைப்பதை விட வெல்குரோ அல்லது காந்தவியல் லாக் பயன்படுத்தி கொசு வலைகளை அமைக்கலாம்.

 இவற்றை அகற்றுவதும் பராமரிப்பதும் மறு சீரமைப்பு செய்வதும் எளிதானது .

நகரங்களில் வசிப்பவர்கள் பிளாஸ்டிக் பைப்பர் மைக்ரோ கார்பன் பாலிஸ்டர் மெல்லிய கம்பிகளால் ஆன கொசுவலைகளையும் கிராமப்புறங்களில் மற்றும் செடிகள் அடர்ந்த பகுதியில் வசிப்பவர்கள் பைபர் இரட்டை மெல்லிய கம்பி வலை, அலுமினிய வலை, பாலிஸ்டர், அடர்த்தியான துணி அல்லது கம்பிகளால் செய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தலாம்.

 மேலும் வீட்டின் கதவுக்கு அடர் நிறத்திலும், ஜன்னலுக்கு வெளிர் நிறத்திலும் ,வலையை தேர்ந்தெடுக்கலாம் .
ஏனெனில் அடர் நிறத்தை விட வெளிர் நிறத்திற்கு அதிக வெளிச்சமும், காற்றோட்டமும் உண்டாகும்.

2 கருத்துகள்

புதியது பழையவை