தும்மல் குறித்த தகவல்கள்
உடலில் பல்வேறு தன்னிச்சையான செயல்கள் நமது கட்டுப்பாடு இல்லாமல் நடைபெறும் .அதில் ஒன்று தும்மல்.
பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற தொற்று கிருமிகள் ஒருவரிடம் இருந்து மற்றோருக்கு பரவுவதற்கான வழிகளில் தும்மல் முக்கியமானது.
மூக்கு, நுரையீரல், கண் மற்றும் காதுகளில் இருக்கும் கிருமிகள் ஒவ்வாமையை உண்டாக்கும் போது ஏற்படும் எரிச்சல் உணர்வே தும்மலாக வெளிப்படுகிறது.
தும்பும் போது மூக்கு மற்றும் நுரையீரலில் இருந்து 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வெளியேற்றப்படுகிறது.
அதேநேரம் பல்லாயிரக்கணக்கான உமிழ்நீர் மற்றும் சளி துகள்களும் அதன் மூலம் வெளியேறுகின்றன.
தும்மலை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு கட்டுப்படுத்தும் போது சைனஸ் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு கடுமையான இருமல் ஏற்படும்.
மார்பு தசைகள், நுரையீரலுக்கு கீழ் இருக்கும் தசைகள், வயிற்று தசைகள், குரல் தண்டு தசைகள், தொண்டையின் பின்புறத்தில் உள்ள தசைகள், கண் இமைகளில் உள்ள தசைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாள் தும்மல் உருவாகிறது .
தும்மல் வரும் போது கண்கள் தானாகவே மூடும் .
இது நம்மால் கட்டுப்படுத்த முடியாத அனிச்சை செயல்.
இதன் மூலம் கண்களுக்கு பின்புறம் ஏற்படும் அழுத்தமும், அசவுகரியமும் தடுக்கப்படும்.
மேலும் தும்மலின் போது வெளிப்படும் கிருமிகள், வைரஸ்கள் கண்களுக்குள் நுழையாமல் இருக்க இது உதவும்.
ஒவ்வொரு முறை தும்பும் போதும் ஒரு வினாடி இதயத்துடிப்பு நின்று பின் அதிகமாக துடிக்கும்.
தும்மலையடக்கும் போது முதுகு வலி, சுளுக்கு, சில சமயங்களில் எலும்பு முறிவு கூட ஏற்படலாம் .
தூசு நிறைந்த இடத்தில் இருக்கும் போது நமக்கு உடனடியாக தும்மல் வரும்.
இதற்கு காரணம் தூசுகள் மூக்கு வழியாக நுரையீரலுக்கு செல்லும்போது அங்குள்ள தும்மல் சுரப்பி நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்காக உடனடியாக சுரந்து அந்த தூசுக்களை தும்பல் வழியாக வெளியேற்றும் .
தொடர்ந்து தும்பும் போது உடலில் ஏற்படும் உணர்ச்சி நிறைந்த தசைகளில் இருக்கும் .
ஏற்படும் அவ்வாறு முதுகு வயிற்று மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் தசை இறுக்கத்தால் சிறுநீர்ப்பையில் அழுத்தம் ஏற்பட்டு சிறுநீர் வரும் உணர்வு உண்டாகும்.
தும்மல் வரும்போது அதை நாம் அடக்கும் நேரம் மற்றும் நுரையீரலின் அளவைப் பொறுத்தே தும்மலுடன் சேர்ந்து பெரும் சத்தமும் ஏற்படுகிறது.