இரவு உணவு
நீங்கள் ஆரோக்கியமாக ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.
நம் உடலை ஆரோக்கியமாக வைப்பது, நாம் உண்ணும் உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
ஆயுர்வேதத்தின் படி உங்கள் உணவை நீங்கள் சரியாக தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.
அந்த வகையில் ஆயுர்வேதம் என்ன கூறுகிறது என்றால் கீழ்க்கண்ட உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிட்டு வருவது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
இது உங்கள் உடலில் உள்ள கபம், வாதம் மற்றும் பித்தம் போன்ற தோஷத்தை சம நிலையில் வைத்து உதவுகிறது.
இரவு நேர உணவுகள்
இரவு நேரத்தில் கடினமான உணவுகளை சாப்பிடாமல் லேசான உணவுகளை எடுத்துக் கொண்டால் நிம்மதியான உறக்கம் பெறுவீர்கள்.
அதேபோன்று இரவு நேரங்களில் காபி போன்றவற்றை பருக கூடாது.
ஏனெனில் காபி நிம்மதியான தூக்கத்தை தராது.
இரவு நேரங்களில் விழிப்பை உண்டாக்கும்.
நீங்கள் சரியாக தூங்க விட்டால் எல்லாவிதமான நோய்களும் வர வாய்ப்புள்ளது .
எனவே இரவு நேரங்களில் தூக்கத்தில் கவனமாக இருப்பது மிக மிக அவசியம்.
இரவு நேரங்களில் உண்ண வேண்டிய உணவுகள்
இரவு நேரங்களில் இலகுவில் செரிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரவு நேரங்களில் கடினமான உணவுகளை , வயிறு முட்ட எடுத்துக் கொண்டால் தூக்கம் சரியாக வராது.
குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் , எளிதாக ஜீரணிக்கும்.
மேலும் உங்களை லேசாக வைக்கும்.
தயிரை இரவில் உண்ணாதீர்கள்.
இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் தயிருக்கு பதிலாக மோர் போன்றவற்றை குடித்து வரலாம்.
ஏனெனில் தயிர் உங்கள் உடலில் கபதோஷத்தை அதிகரித்து சளித் தொல்லையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது .
இது உங்கள் நாசிப் பகுதியில் சளியை உண்டாக்கும்.
அளவோடு சாப்பிடுங்கள்.
எப்பொழுதும் அளவோடு சாப்பிடுவது உங்கள் உடல் எடையை குறைக்க பயன்படும் .
எனவே உங்கள் இரவு உணவை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள் .
இது இரவில் தரமான தூக்கத்தை தர உதவி செய்யும் .
ஏனெனில் நம் செரிமான அமைப்பு இரவில் செயலற்றதாக இருக்கும்.
விரைவில் அதிகமான உணவு எடுத்துக் கொள்வது உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கலாம்.
அதிகப்படியான உணவு உங்களுக்கு காலையில் எழும்போது அஜீரணத்தை ஏற்படுத்தும் .
புரத உணவுகள்
இரவில் அதிகம் புரதம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
புரதம நிறைந்த உணவுகளான பருப்பு, பச்சை காய்கறிகள், கருவேப்பிலை போன்றவை நல்லது .
இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பால் அருந்துங்கள்
இரவில் உங்களுக்கு பால் குடிக்கும் பழக்கம் இருந்தால் குறைந்த கொழுப்புள்ள பாலை அருந்துங்கள்.
இரவு நேரங்களில் குளிர்ந்த பாலை குடிக்க வேண்டாம் .
பாலை குடிப்பதற்கு முன்பு நன்றாக கொதிக்க வைத்து சூடு படுத்திக் கொள்ளுங்கள் .
குறைந்த கொழுப்புள்ள பால் உங்களுக்கு எளிதாக ஜீரணமாக உதவி செய்யும்.
இந்த பாலுடன் சிறிதளவு இஞ்சி மற்றும் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
காரமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
மாலை நேரத்தில் ஸ்னாக்ஸ் போன்றவற்றை நீங்கள் எடுப்பதாக இருந்தால் காரமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
காரமான உணவுகள் உங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்க உதவி செய்யும்.
பசியை குறைத்து ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவி செய்யும்.
லவங்க பட்டை, பெருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் ஏலக்காயை உங்கள் மாலை உணவில் சேர்த்து வரலாம்.