புற்று நோய்க் கிருமிகளை கட்டுப்படுத்தும் தேன்

புற்று நோய்க் கிருமிகளை கட்டுப்படுத்தும் தேன்
தேனும், தேன் பொருட்களும் புற்றுநோயை குணப்படுத்த உதவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .

குராேஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேன் பற்றிய ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.

 தேன் மற்றும் தேன் பிசின் , தேனியின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்பதுதான் இந்த ஆய்வின் முடிவு.

 தேன்கூட்டை கட்டுவதற்கு தேனிகள் ஒருவிதமான பிசினை பயன்படுத்துகின்றன.

 இதை தேன் பிசின் அல்லது தேன் மெழுகு என்பார்கள் .

வேலைக்கார தேனீக்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் இருந்து வரும் ஒருவித திரவம் லார்வா தேனீக்களுக்கு உணவாகும்.

 தேனியில் கொடுக்கில் உள்ள விஷம் ஆபத்து இல்லாதது .

ஆனால் தேனீ கொடுக்கினால் வீக்கம் ஏற்பட்டு கடுகடுக்கும்.

 அப்படிப்பட்ட தேனியின் விஷம் தேனின் மெழுகு , தேனியில் உமிழ் நீர் திரவம் , தேன் ஆகியவற்றை எலிக்கு செலுத்தி சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

 அதற்கு முன்பு எலிக்கு செயற்கையாக புற்றுநோய் ஏற்படுத்தினர் அதற்குப் பிறகு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .

தினமும் எலிக்கு தேனும் வழங்கப்பட்டது.

 சில மாதங்கள் கழித்து நடத்தப்பட்ட ஆய்வில் புற்றுநோய் தாக்கம் தடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

 இதன் பிறகு தனித்தனியாக தேன், மிளகு, உமிழ் நீர் , விஷம் மற்றும் சோதனை அளிக்க கொடுக்கப்பட்டது இதில் தேன் மெழுகு மூலம் எலியின் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சி கணிசமாக கட்டுப்பட்டு படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.

 மேலும் எலியின் ஆயுள் காலமும் அதிகமாக உள்ளது .

தேனியின் விஷம் காரணமாக எலியின் புற்று நோய்க் கிருமிகளும் பெருமளவு அழிக்கப்பட்டன .

தேனியில் உமிழ்நீர் காரணமாக எலியின் உடலுக்குள் புற்று நோய்க் கிருமிகள் பரவுவது கணிசமாக குறைந்து இருந்தது .

தேன் பொருட்கள், புற்றுநோய் கிருமிகள் மடிய காரணமாக இருக்கின்றன அல்லது புற்றுநோய் கிருமிகளுக்கு தேன் பொருட்கள் விஷமாகின்றன.

 இதன் மூலம் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை தடுப்பதற்கு தேன் பொருட்கள் முக்கிய கருவிகளாக பயன்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் .

ஆய்வாளர்கள் இன்னும் இதை உறுதி செய்ய பலத்த ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இன்னமும் இதுபோன்ற சோதனை நடத்தப்படவில்லை.
 மனிதர்களிடமும் ஆய்வு நடத்தி தேன் பொருட்கள் புற்றுநோய் கிருமிகளை அழிப்பது உறுதியானால் உலகில் தேனுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்துரையிடுக

புதியது பழையவை