தையல் மிஷின்கள் நீண்ட காலம் உழைக்க வேண்டுமா?

தையல் மிஷின்கள் நீண்ட காலம் உழைக்க வேண்டுமா?

 இதோ ஆலோசனைகள் 

இந்த பாகங்களுக்கு எண்ணெய் விடுங்கள் 

துணியை தைப்பதற்கு முன்பு மிஷினின் ஊசி, சட்டில் பாயிண்ட், பாபின் நூல் போடும் வட்டு போன்ற பாகங்களில் எண்ணெய் விடவும்.

 2. பெடல்களை சுத்தம் செய்யுங்கள்

கால்களால் இயக்கும் மிஷின்களை வைத்திருந்தால் பெடல்களை சுத்தம் செய்ய மறவாதீர்கள்.

 இதற்கு பெடலில் இருக்கும் திருகு அல்லது முடிச்சில் எண்ணெய் விடவும்.

 3. பவர் மிஷின் கவனமாக பராமரியுங்கள்

பவர் மிஷின் என சொல்லப்படும் எலக்ட்ரானிக் தையல் மிஷினை சுத்தம் செய்ய ஒரு கப் தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும் .

அதில் காட்டன் துணியை நனைத்து எடுத்து மிஷினை சுத்தம் செய்யவும்.

 பின்பு பாபின் நூல் போடும் வட்டு ஆகியவற்றில் எண்ணெய் விடவும்.

 4. ஊசியை கவனமாக பராமரியுங்கள்

வெவ்வேறு ஆடைகளை தைக்க வெவ்வேறு ஊசிகள் உள்ளன.

 இந்த விஷயத்தில் துணிகளுக்கு ஏற்ற ஊசியை தேர்ந்தெடுக்கவும்.

 5 . இரும்பு தையல் மிஷின் 

இரும்பு தையல் மிஷினில் ஏதேனும் துரு இருந்தால் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி அதை எளிதாக சுத்தம் செய்யலாம் .

6. தைக்கும் முறை 

மிஷினில் தைக்கும் துணியை கடினமாக இழுக்க வேண்டாம்.

 அவ்வாறு செய்வதால் துணி கிழியலாம் அல்லது மிஷினுக்கும் சேதம் ஏற்படலாம்.

 7.  இந்த காரணத்தினால் மிசின் பழுதடைகிறது

தடியான துணிகளை தைத்தாலோ? துணிகள் பலமுறை மாட்டிக் கொண்டாலோ ? தையல் மிஷின் பழுதடையும் .
இதை மனதில் கொண்டு மிஷினில் கவனமாக துணிகளை தைக்கவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை