வேலை செய்ய கற்றுக் கொள்ளுங்கள்

வேலை செய்ய கற்றுக் கொள்ளுங்கள்
டெக்னாலஜி வளர்ச்சி உச்சம் தொட்டிருக்கும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றபடி ஸ்மார்ட் திறமைகளுடன் இருப்பவர்களை எந்த வேலை வாய்ப்புக்கும் ஏற்றவராக மாற முடியும்.

 வேலை வாய்ப்பு , தொழில் மற்றும் வியாபாரம் என்று எதிலும் முதன்மை பெறுவதற்கு கீழ்காணும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள் .

வித்தியாச சிந்தனை 

ஒரு பிரச்சனை அல்லது நெருக்கடி ஏற்படும்போது கையை பிசைந்து கொண்டு நிற்பதோ அல்லது வேறு யாரோ சமாளித்துக் கொள்வார்கள் என்று அமைதி காத்திருப்பது சரியான அணுகுமுறை அல்ல.

 வித்தியாசமாக சிந்தித்து தீர்வுகளைத் தேடும் மனிதர்களையே நிறுவனங்கள் விரும்புகின்றன .

துறை சார்ந்து கற்றுக்கொண்டு ஒவ்வொரு வேலை திட்டத்துக்கும் ஏற்றபடி சுய சிந்தனை உடன் முடிவு எடுக்கும் திறன் வேண்டும் .

தலைமை பண்பு 

ஒரு நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர் மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்ற நிலை இப்போது மாறிவிட்டது.

 எல்லோரின் யோசனைகளும் மதிக்கப்படுகின்றன.

 குழுவாக சேர்ந்து வேலை செய்யும் இடங்களில் அந்த குழுவே இணைந்து முடிவுகளை எடுக்கிறது . எனவே சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன் பெறுங்கள் .

ஒருங்கிணைத்தல் 
 மற்றவர்களோடு இணைந்து செயல்பட விரும்பாமல் தனி தீவாக ஒதுங்கி இருப்பவர்களை நிறுவனங்கள் விரும்புவதில்லை.

 எல்லாரையும் உற்சாகப்படுத்தி வேலை வாங்கி, தாமும் உற்சாகமாக உழைக்கும் மனிதர்களையே விலை மதிக்க முடியாத சொத்துக்கள்.

 எப்படிப்பட்ட மனிதர்களுடனும் இணைந்து உழைக்க தயாராக இருங்கள்.

 தொடர்பு எல்லையில் இருத்தல்

ஒரு முக்கியமான தருணத்தில் உங்களைத் தேடும்போது எவரும் தொடர்பு கொள்ள முடிகிற படி இருங்கள்.

 நெருக்கடியான தருணங்களில் உங்களிடம் வருகிற வேலைகளை தட்டிக் கழிக்க காரணம் தேடாதீர்கள்.

 இவரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்கலாம் என்ற பெயரை வாங்குங்கள்.

 தெளிவாக சொல்லுதல்
மேலதிகாரிகளிடமோ சக ஊழியர்களிடமோ தங்களுக்கு கீழே வேலை பார்ப்பவர்களிடமோ தெளிவான தகவல் தொடர்பு முக்கியம்.

 இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு வரும் என்பது போன்ற எளிமையான விஷயங்களை கூட தெளிவாக விளக்கி விடுங்கள்.

 புதுமை செய்தல் 

வழக்கமாக செய்யும் ஒரு வேலையை கூட புதிய முறையில் செய்யும் போது அது எளிமையாக முடியும். சீக்கிரம் செய்து விடலாம்.

 இப்படி புதுமை செய்து நேரத்தையும் செலவையும் குறைப்பவர்களை எல்லா நிறுவனங்களும் விரும்பும்.

 அனுசரித்து போதல் 
வேலை நேரத்தை தாண்டியும் சில நாட்களில் வேலை பார்க்க நேரிடலாம்.

 சில நேரங்களில் உங்கள் வேலைகளைக் கடந்து அடுத்தவர்களின் வேலைகளையும் பகிர்ந்து கொண்டு செய்ய வேண்டி இருக்கலாம் .

இப்படி எல்லாவற்றுக்கும் அனுசரித்துப் போகிறவர்களுக்கு மதிப்பும், வளர்ச்சியும் கிடைக்கும்.

 வளரச் செய்தல் 

நீங்கள் எந்த துறையில் எப்படிப்பட்ட வேலை செய்தாலும் அந்த வேலை சார்ந்து உங்கள் நிறுவனம் உயர வேண்டும்.

 நீங்கள் செய்யும் வேலையின் மூலம் லாபம் பெருக வேண்டும்.

 வளர்ச்சியில் ஒரு தூணாக இருப்பது தான் ஒருவருக்கு மதிப்பை பெற்றுக் கொடுக்கும்.

 தகவல் கொடுத்தல் 

கற்றல் மற்றும் அனுபவத்தின் மூலம் பெறும் எல்லா தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருங்கள்.

 நீங்கள் பணி புரியும் நிறுவனத்தில் பல நேரங்களில் இது தேவைப்படும்.
 இப்படி ஒரு சூழலில் இந்த முடிவை முன்பு நாம் எடுத்து இருக்கிறோம் அல்லது இவர்கள் இப்படி முடிவு எடுத்தார்கள் என்று சுட்டிக்காட்டி வழிநடத்த இது உதவும்

கருத்துரையிடுக

புதியது பழையவை