நீர் ஆரோக்கியம்

நீர் ஆரோக்கியம்
எத்தனையோ விலை உயர்ந்த கிரிம்களும் அழகு சாதன பொருட்களும் பயன்படுத்தியும் கூட சிலருக்கு முகப்பொலிவு என்பது தண்ணிப்பட்ட பாடாகவே இருக்கும் .

ஆனால் எளிமையான நீரின் மூலமே பல சரும பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.

 முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

 இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும் .

மேலும் வெளியே செல்வதற்கு முன்பும் வீட்டிற்கு வந்த பின்பும் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து கழுவ வேண்டும் .

இவற்றால் சரும துளைகளில் உள்ள இறந்த செல்கள் வெளியேறிவிடும் .

அதிலும் பாடி ஜெல் மற்றும் சோப்புகளை பயன்படுத்தினால் சரும துளைகளில் அடிபட்டிருக்கும் முகப்பருக்கள் வந்துவிடும்.

 ஆகவே குளிக்கும் போது தவிர மற்ற நேரங்களில் சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது .

அதீத வெயிலில் சென்று திரும்பினால் முகத்தை சுத்தமான துணியால் சூடான நீரில் நனைத்து பிழிந்து பின் துடைக்க வேண்டும்.

 மேலும் அவ்வாறு செய்யும்போது அந்த துணியை நீரில் நனைந்து பிழிந்தும் முகத்தில் ஒரு நிமிடம் வைக்க வேண்டும்.

 இதனால் முகத்திற்கு ஒரு சிறிய ஸ்டீம் கொடுத்தது போல் இருக்கும்.

 இதனை தொடர்ந்து செய்து வந்தால் இரண்டு நாட்களில் சருமம் நன்கு பொலிவோடு காணப்படும் .

முக்கியமாக முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீர் தான் சிறந்தது.

 அப்போது சுடு சூடான நீரை பயன்படுத்தக் கூடாது .

அவ்வாறு பயன்படுத்தினால் அழுக்குகள் சருமத்திலேயே தங்கிவிடும் .

கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 மேலும் கைகளை கழுவாமல் எப்பொழுதும் முகத்தை தொடக்கூடாது.

 ஏனெனில் கைகளில் எப்போதும் கிருமிகள், பாக்டீரியாக்கள் இருக்கும் ஆகவே சுத்தம் மிகவும் முக்கியம். 

இரவில் முகம் கழுவி விட்டு எந்த கிரீம்களும் பயன்படுத்தாமல் வாரத்திற்கு இரண்டு ஒரு முறை சருமத்தை இப்படி கிரிம்ன்கள் பூச்சுகள் இல்லாமல் விடுவதும் செல்களுக்கு நல்ல  காற்றோட்டம் கிடைக்கும்.

 இதனால் சர்வ துவாரங்கள் புத்துணர்வு பெறும்.

 பொதுவாக இரவில் உறங்கும் முன் எவ்வித கிரிமிகளும் இல்லாமல் தூங்குவது சருமத்திற்கு சிறந்தது .

அதீத வறண்ட சருமம எனில் சிறிது பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.

 காலையில் எழுந்தவுடன் நீரை வாரி இறைத்து முகத்தை கழுவினால் சர்ம செல்கள் துண்டாக்கப்பட்டு புத்துணர்வான உணர்வு கிடைக்கும்.
 மேலும் முகத்தில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை