கால் வலி குணமாக

கால் நாேய்கள் குணமாக
 ஆலமரத்திலிருந்து வெளியாகும் பாலை பாத வெடிப்பில் தடவினால் கால் மென்மையாகி விடும்.

 குழந்தை கீழே விழுந்து கால் வீங்கி விட்டால் கொஞ்சம் மண்ணெண்ணெய் தடவினால் வீக்கம் போய்விடும்.

 குதிங்கால், முழங்கை காய்ப்பு ஏற்பட்டு கருத்து போனால் அந்த இடத்தில் எலுமிச்சை சாற்றை தேய்க்கலாம்.

 இளஞ்சூடான நீரில் தினமும் காலை மாலை 10 நிமிடம் நின்றால் கால் வலி போய்விடும்.

 பிளாஸ்டிக் செருப்பு வாங்கியதும் தண்ணீரில் ஊற வைத்தால் காலை கடிக்காமல் உழைக்கும்.

 வில்வ காய்களை ஓடு நீக்கி அரைத்து நல்லெண்ணையில் ஒரு வாரம் ஊற வைத்து தினமும் தடவினால் குதிங்கால் வலி நீங்கும்.

 காலில் முள் குத்திய இடத்தில் வலி ஏற்பட்டு விட்டால் வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அனலில் காட்டி சூட்டோடு வலிக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம் .
கீழாநெல்லி இலையை பறித்து சிறிது நல்லெண்ணையை சேர்த்து அரைத்து இரவு தூங்கப்போகும் முன் சொத்தை பட்ட நகங்களில் தடவ குணமாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை