முகப்பரு நீங்க கை வைத்தியம்

முகப்பரு நீங்க கை வைத்தியம்

திரிபலா பொடியை நீரில் கலந்து அதனைக் கொண்டு முகம் கழுவி வந்தால் பருக்கள் நீங்கி முகம் பளிச்சிடும் .

கொழுந்து வேப்பிலையை அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு இரு முறை செய்து வந்தால் முகப்பருக்கள் நீங்கும்.

 திருநீறு பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும்.

 குங்குமாதி தைலத்தை பருக்களின் மீது தடவி வர பருக்கள் மறைவதோடு முகத்தில் உள்ள தழும்புகளும் மறையும் .

நல்லெண்ணெய் 50 மில்லி எடுத்து அதில் சிறிதளவு மிளகு ஊற வைக்க வேண்டும். 20 நாட்கள் கழித்து அந்த எண்ணையை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.

 வெங்காயத்தை பொடி செய்து அதை தண்ணீருடன் கலந்து பரு பழுத்திருக்கும் இடங்களில் தடவி வந்தால் பரு விரைவில் பழுத்து உடையும்.

 வெள்ளரி பிஞ்சு அரைத்து தக்காளி சாறு ஊற வைத்து தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பருக்கள் மறையும் .முகப்பரு மீண்டும் வருவதை இது கட்டுப்படுத்தும்.

 மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படலாம். வெட்பாலை தைலத்தை பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்குவதோடு முகப்பரு மறையும்.

 பொடுகால் ஏற்படும் முகப்பரு பொடுகு தலை இலை சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்துவர பொடுகு நீங்குவதோடு முகப்பருக்கள் சீக்கிரம் மறையும்.
 எலுமிச்சை பழச்சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊற வைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும் வாரம் இரு முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பரு மறைந்துவிடும் . ஆனால் எக்காரணம் கொண்டும் எலுமிச்சம் பழச்சாற்றை தனியாக முகத்தில் தேய்க்க கூடாது.

கருத்துரையிடுக

புதியது பழையவை