வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவது எப்படி?

வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவது எப்படி? 

வாய் சுகாதாரத்தை மேம்படுத்தி இதய நோயின் அபாயத்திலிருந்து தப்பிக்க ஒரு சில பழக்கங்களை தவறாமல் பின்பற்றி வந்தாலே போதும் அவை :

 தினமும் தவறாமல் காலை இரவு என இரண்டு வேளை பற்களை துலக்க வேண்டும் .

அதுவும் ப்ளாரைடு டூத் பேஸ்ட் கொண்டு பற்களை துலக்க வேண்டும்.

 அதோடு தினமும் பற்களின் இடுக்குகளில் சிக்கி உள்ள உணவு துகள்களை நீக்க ப்ளாஸ் செய்ய வேண்டும்.

 பற்களில் சொத்தை இருந்தாலோ? அல்லது ஈர நோய்கள் இருந்தாலும் மருத்துவரை அணுக தாமதிக்க வேண்டாம் .

சீரான இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி பற்களை சோதனை செய்வதோடு பற்களை சுத்தம் செய்ய வேண்டும் .

புகை பிடிக்கும் பழக்கம் நுரையீரலுக்கு மட்டும் தீங்கு விளைவிப்பது இல்லை.

 இதய நோய்கள் மற்றும் வாத அடைப்பு பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். எனவே இவ்வழக்கத்தை உடனே கைவிட வேண்டும்.

 பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து எப்போதும் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும் .
இது வாய் ஆரோக்கியத்திற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் ஆதரவு அளிக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை