கூந்தல் தைலங்கள்
தலைசூடு, நுண் கிருமிகள் போன்ற காரணங்களாலேயே முடி உதிர்வது, நரை, பொடுகு போன்றவை உண்டாகின்றன.
இவற்றை தடுப்பதற்கு சில தைலங்களை செய்து உபயோகித்து வரலாம் அவை செய்வதற்கேற்ற வழிமுறைகள் இதோ:
சந்தனாதி தைலம்
நல்லெண்ணெய், பசும்பால், தண்ணீர் அனைத்தும் தலா அரை லிட்டர் சேர்த்து காய்ச்சவும் .
நன்னாரி, அதிமதுரம், சந்தனத்தூள், ஏலரிசி ,நெல்லி விதை ,தாமரைப்பூ, வெட்டிவேர், கோரை கிழங்கு, தேவதாரம் ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து இடித்து பொடி செய்து எண்ணெயில் போட்டு மீண்டும் ஒருமுறை நன்றாக காய்ச்சி ஆறவிட்டு வடிகட்டி பாட்டிலில் அடைக்கவும்.
வில்வாதி தைலம்
100 கிராம் வில்வ வேர் பட்டையை இடித்து தூளாக்கி கொண்டு இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விடவும்.
நீர் சுண்டிய பிறகு எடுத்து அரை லிட்டர் நல்லெண்ணெயில் போடவும்.
சந்தனத்தூள் 50 கிராம் ,கடுக்காய் 10 கிராம், கஸ்தூரி மஞ்சள் 10 கிராம் எடுத்து இடித்து பொடி செய்து சேர்த்து எண்ணையை நன்றாக காய்ச்சி இறக்கி ஆறியதும் வடிகட்டவும்.
நெல்லித்தழம்
நெல்லிக்காயை இடித்து பிழிந்து சாறு கால் லிட்டர் உடன் அரை லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து மூன்று நாள் வெயிலில் காய வைக்கவும்.
பிறகு அதை நிதானமாக எரியும் தீயில் காட்டி இறக்கி பாட்டில்களில் நிரப்பவும்.
ஒரு வாரத்திற்கு பிறகு உபயோகிக்கலாம்.
எண்ணெய் குளியலுக்கு இத்தயலத்தை பயன்படுத்தினால் கண் எரிச்சல், பித்தம் போன்றவை நீங்கும் .
தலைமுடி பளபளப்பாக இருக்கும்,