நகம் பளபளப்பாக

நகம் பளபளப்பாக
பழைய பல் துலக்கியில் சில சொட்டுக்கள் எலுமிச்சை சாறை விட்டு விரல் நகங்களில் தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

 கை நகங்களை நன்கு சுத்தம் செய்துவிட்டு நகங்களில் தேங்காய் எண்ணெய் வாசலின், லிக்விட் பராபின் இவற்றில் ஏதேனும் ஒன்றை தடவி விட்டு மறுநாள் கழுவ கை, கால் நகங்கள் அழகாக மின்னும்.

 சமைக்கும்போதும், துணி துவைக்கும் போது கைகளுக்கு கை உறை போட்டுக்கொள்ள நகத்தில் கீறல் விழாது.

 அடிக்கடி விரல்களை சுடக்கினால் சுருக்கங்கள் ஏற்படும்.

 தேன் - கை நகங்களில் தடவி பின் ஊறிய பிறகு கழுவலாம் .

கை விரல்களுக்கு தரமான நக வண்ணப்பூச்சி போட்டுவர கோடு வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

 தோட்டவேலை செய்யும் போது கையுறை போட்டுக் கொள்ளலாம்.

  வாழைப்பூ, வாழைக்காய் போன்ற கரை ஏற்படுத்தும் காய்கறிகளை நறுக்கும் முன் எண்ணெய் தடவிக் கொள்ளலாம் அல்லது கையுறை பயன்படுத்தலாம் .

உடலில் ஏற்படும் நோய் அதிக அறிகுறிகள் கூட நகங்களில் காட்டலாம்.
 சத்தான உணவு, நல்ல உறக்கம் போன்றவை உடலையும், நகங்களையும் அழகாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை