யார்? முதலில் மாற வேண்டும்
ஓவியம் ஒன்றை சுவரில் தலைகீழாக மாட்டி வைத்துவிட்டு இது சரியாக தெரியவில்லையே என்று புகார் சொல்வது நியாயமா ?
எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாமே தவறாக நடக்கிறது என்னால் இனி மாற முடியாது இதை செய்வது எனக்கு சாத்தியம் இல்லை என்பது போல மீண்டும் மீண்டும் வேண்டாத சொற்களையே மனதுக்குள் சொல்லிக் கொண்டு பின்னர் எல்லாம் கெட்டதாக நடக்கிறது என்று புலம்பக் கூடாது.
பிறர் மாறவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்துவிட்டு என் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை என்றால் எப்படி நம் வாழ்வில் மாற்றம் வரும். வேண்டும் என்றால் முதலில் நாம் தான் மாற வேண்டும் .
நமது பழக்க வழக்கங்களை தான் மாற்ற வேண்டும் .
உதாரணமாக:
எல்லாவற்றையும் தலைகீழாக பார்க்கும் குணத்தை முதலில் கைவிட வேண்டும் .
பிள்ளைகள் ஏன் இப்படி எனக்கு தொந்தரவு தருகிறார்கள் என்று சிலர் புலம்புவார்கள்.
கணவர் அடிக்கடி சண்டை போடுகிறார் என்பது பல பெண்களின் புகார்.
என்னை பார்த்தாலே இளக்காரமாக போய்விட்டது அதனால் என்னிடம் எல்லாரும் சண்டை போடுகிறார்கள் என்று நினைப்பது தலைகீழாக பார்க்கும் பார்வை.
உங்கள் மீது குறையுள்ளது என்பதை உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள் .
பள்ளியில் நடந்த சம்பவங்களின் காரணமாகவோ ? அலுவலகத்தில் ஏற்பட்ட எரிச்சலின் காரணமாகவோ ? உங்களிடம் பிள்ளைகளும், கணவரும் தவறான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்.
இது அவர்களது பிரச்சனை .உங்கள் பிரச்சனையில்லை என்பதை உணருங்கள் .
இரண்டாவதாக உங்களுக்குள்ளேயே நீங்கள் சொல்லும் வார்த்தைகளை கவனமாக உபயோகிக்க வேண்டும்.
ஒரே விஷயத்தை இரண்டு விதமாக சொல்லலாம் .
இந்த விஷயத்தை அவர் எனக்கு சொல்லவில்லை என்று மனதுக்குள் புழங்குவதை விட , நான் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன் .
கேட்டால் என்ன குறைந்து போய் விடுவேன். என்று நேராக போய் கேட்கலாம் .
வேலை விஷயத்தில் யாரும் எனக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று எரிச்சல் அடைவதை விட அவர்களின் ஒத்துழைப்பை எப்படி பெறுவது என்று வழி தேடலாம்.
இது வெறும் வார்த்தை ஜாலம் கிடையாது .
நம் வாழ்வை மாற்றும் மாயாஜாலம் .
நம் மனதுக்குள் நாம் பேசும்போது ஆக்கப்பூர்வமாக நம்பிக்கையோடு பேசிக் கொண்டால் நடப்பதும் நன்மையாகவே நடக்கும் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
முக்கியமான ஒன்று வாழ்வில் எந்த பிரச்சனைக்கும், எந்த முன்னேற்றத்திற்கும் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதுதான்.
முதன்மையானது பிறர் உதவவில்லை. பிறர் என் பேச்சை மதிப்பதில்லை, பிறர் மோசாக இருக்கிறார்கள் .என்றெல்லாம் புலம்புவது அர்த்தம் அற்றது .
பிறரை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் .
இவர்கள் திருத்துவது நம் கையில் இல்லை .
நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
நீங்கள் எதில் மாற்றம் கொண்டு வருகிறீர்கள் ?
உங்கள் செயல் என்ன?
என்பதிலேயே நேரத்தையும், சக்தியையும் செலவிடுங்கள்.
உங்களது பொறுமை அதிகமாகும்போது, உங்களது கூர்ந்து கவனிக்கும் திறன் கூடும்போது, உங்களது மனதில் பெருத்தன்மை பெருகும் போது, உங்களது மனம் உங்களுக்குள் கட்டுப்படும்போது, எல்லா விஷயங்களுமே உங்களால் செய்யக்கூடிய அளவுக்கு சுலபமாக மாறிவிடும்.
மற்றவர்களும் உங்கள் பேச்சை மதிப்பார்கள் .
நம் மனதை நாம் கையாளும் முறையினால் பிறர் மனதை கவர்ந்து விடலாம்.