காய்கறி மருத்துவம்
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டால் இருமல், கபக்கட்டு நீங்கும்.
பப்பாளி பழத்தை தேனில் தொட்டு சாப்பிட்டால் தாய்ப்பால் போதுமான அளவு சுரக்கும் .
சமையல் செய்யும்போது சூடு பட்டால் பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தடவினால் போதும் விரைவில் குணமாகும்.
வாழைத்தண்டு சாறை எடுத்து தீப்பட்ட புண்ணில் அடிக்கடி ஊற்றி வர புண் குணமாகும்.
வயிற்று வலி, வாய்ப்புண் இருந்தால் கருவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி குடித்தால் போதும்.
இஞ்சியை நறுக்கி தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்துத் தின்றால் பற்களில் உள்ள கரைகள் நீங்கிவிடும்.
வெள்ளைப் பூண்டு அரைத்து எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து தலையில் தேய்த்து வர பேன் தொல்லை நீங்கும் .
இஞ்சி துண்டை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து சாப்பிட்டால் வாய் கசப்பு நீங்கிவிடும்.
பூண்டு சாற்றில் சிறிது உப்பு கலந்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு மறையும் .
கருவேப்பிலையை அரைத்து நாள்தோறும் நெல்லிக்காய் அளவு வெறும் வாயில் சாப்பிட்டு வர இளநரை விரைவிலேயே மறைந்து போகும்.
வெங்காயத்தை நறுக்கி பசு நெய் விட்டு வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாக தோன்றும் மூலம் குணமாகும்.
வெங்காயத்தை நாள்தோறும் விளக்கெண்ணையில் வதைக்கு சாப்பிட்டு வர வயிறு சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.
வயிறு முட்ட சாப்பிட்டு விட்டால் வெங்காயத்தை துண்டாக்கி பச்சையாக சாப்பிட செரிமானம் ஆகும்.
பெண்களின் அடிவயிற்று கொழுப்பை குறைப்பதற்கு நாள்தோறும் ஒரு துண்டு இஞ்சி அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்து குடித்தால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேராது .
முகத்தில் சுருக்கம் தெரிந்தால் முட்டைக்கோஸ் இலை சாறினை தடவி வர சுருக்கம் நீங்கும்.
பெண்கள் அடிக்கடி வெள்ளரிக்காய் தின்றால் முகப்பரு நீங்கும் மாதவிலக்கு தொல்லை சீரடையும்.
பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொண்டால் புதிய ரத்தம் உருவாகும்.
மாதுளம் பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.
பீர்க்கங்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர மூளை பலப்பெறும் .
அத்திப்பழம் தினந்தோறும் ஐந்து சாப்பிட்டு வர நரம்பு பலம் பெறும்.
அகத்திக்கீரை அவிழ்த்த தண்ணீர் பருகினால் வாய்ப்புண் ஆறும்.
மூச்சு வாங்கும் தொந்தரவு தீர தூதுவளை மாமருந்தாகும் .
வல்லாரை குடிநீர் ஞாபக சக்தியை பெருக்கும் ஆற்றல் உடையது.
புதினா துவையல் வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல மருந்து.
பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு நீங்கும்.
நந்தியாவட்டை வேரை மென்று துப்ப பல் வலி நீங்கும்.
கோவை இலை கசாயம் குடித்து வர கண் எரிச்சல் நீங்கும் .
காட்ட குச்சியால் பல் துலக்க பல் ஆட்டம் தீரும் .
பேயன் வாழைப்பழம் வெப்பத்தை குறைக்கும் .
குப்பைமேனி, உப்பு, மஞ்சள் சேர்த்து போட பூரான் கடி நீங்கும் .
பப்பாளி பழம் தொடர்ந்து சாப்பிட்டால் பலவீனம் நீங்கும்.
பட்டை கசாயம் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.
திராட்சை, சாத்துக்குடி ரத்த அழுத்தத்திற்கு நல்லது .
துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்க சளியை அகற்றும்.
பீர்க்கங்காய் வேர் கசாயம் சாப்பிட ரத்த சோகை குணமாகும் .
சந்தனத்தூள் கசாயம் குடிக்க நீர் கோர்வை காய்ச்சல் தீரும்.
அகத்திக்கீரை சாப்பிட பித்த கோளாறுகள் அகலும்.
மஞ்சள், சுண்ணாம்பு, அருகம்புல் கலந்து பூச நகச்சுற்று குணமாகும்.
பல்வலி ஈறு வீக்கம் உள்ளவர்கள் ஒரு துண்டு சுக்கை இடித்து வலி உள்ள இடத்தில் வைக்க குறையும்.