தினமும் முட்டை சாப்பிடலாமா?
தினசரி ஒரு முட்டை உண்டவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
இது சம்பந்தமாக சமீபத்தில் 30 வயது முதல் 79 வயதுக்குட்பட்ட 5 லட்சம் பேரிடம் சீன ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர் .
அந்த ஆய்வின் முடிவில் தினமும் உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் இதய நோயால் ஏற்படும் இறப்பு 18 சதவீதம் வரை குறைகிறது என்று கண்டறிந்துள்ளனர் .
அது போன்று பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு 28% வரை குறைய வாய்ப்புள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
முட்டையில் வைட்டமின்களும், புரதங்களும் உள்ளடங்கி இருப்பதால் தினமும் ஒரு முட்டையை அவித்தோ, பொறியலாகவோ சாப்பிடுவது நல்லது.
அதே சமயம் முட்டையில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால் அதனை அதிக அளவு உட்கொள்வது உடல் நலனுக்கு கேடானது .
அளவுக்கு அதிகமாக முட்டையை உட்கொள்ளும் போது அது ஜீரணம் அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் .
சில சமயங்களில் சரியாக ஜீரணமாகாமல் அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும்.
ஜீரண மண்டலம் பாதிக்கப்படும் போது சிலருக்கு அவர்களுக்கு தெரியாமலேயே வேறு சில உணவுகள் அலர்ஜி அல்லது முட்டையால் அலர்ஜி ஏற்படுவதும் அதிகரிக்கும்.
வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.
எனவே அளவோடு முட்டையை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்பதையே ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தி உள்ளன.
Super message
பதிலளிநீக்கு