வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
கொடி வகைகளை சேர்ந்த இது வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது.
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி அதிகம் உள்ளன.
வைட்டமின்களுடன் நார் சத்தும் இருப்பதால் சீதள நோய்கள் , குடல் புண்கள், உடல் இறுக்கத்தை குணப்படுத்துகிறது .
வெற்றிலை நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
செரிமானத்தை தூண்டி வாய் நாற்றத்தையும் போக்கும் .
வெற்றிலை மெல்லுவதால் ஈறுகளில் உள்ள வலி இரத்தக் கசிவு நீங்கி ஆட்டம் காணும் .
பற்களையும் கெட்டியாக பிடிக்கும்.
வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியே தள்ளும் தன்மை கொண்டது.
நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுக்கும்.
படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
வெற்றிலைச் சாறுடன் கஸ்தூரி அல்லது காேரோசனை சேர்த்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் சளி இருமல் போன்றவை குணமாகும்.