அருமையான மூலிகை துளசி

அருமையான மூலிகை துளசி

தினமும் இரண்டு முறை துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லுவதால் மன அழுத்தம் குறையும். இரத்த ஓட்டம் சீராகும். சிறுநீரக கற்கள் இருந்தால் வெளியேறும் .கற்கள் வருவதை தடுக்கும்.

 துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லுவதால் வாயில் வீசும் துர்நாற்றம் மறையும்.

 உடம்பில் ஏற்படும் கொப்பளங்களுக்கு துளசி இலையை தண்ணீர் விட்டு அரைத்து பூசி வந்தால் எளிதில் குணமாகும் .

சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி .

காலையில் ஒருவேளை குடித்து வந்தால் நோய்கள் கட்டுப்படும் .

துளசி இலையை கனலில் வாட்டி சாறு பிழிந்து காலை மாலை இருவேளைகள் காதில் விட்டு வந்தால் காது சம்பந்தமான நோய்கள் தீரும்.

 மழைக்காலத்தில் துளசி இலையை தேநீர் போல காய்ச்சி குடித்து வந்தால் விஷ காய்ச்சல்கள் வராது.

 தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலை கசாயம் குடித்து வந்தால் புண்கள் மறைந்துவிடும்.

 துளசி இலைச் சாறுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலி உள்ள இடத்தில் பூசினால் வலி மறையும்.

 வெட்டுக் காயங்களுக்கு துளசி இலை சாறு பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

 துளசி இலை சாறுடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும் .
அருமையான மூலிகை துளசியை வளர்ப்போம் பயன் பல பெறுவோம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை