மாேரின் பயன்கள்
உடலுக்கு தேவையான குளிர்ச்சியை உண்டாக்கும் வெயில் காலத்தில் காரமாக அல்லது அதிக மசாலா கொண்ட உணவுகள் உண்பதால் சிலருக்கு வயிற்று எரிச்சல் கடுப்பு போன்ற உபாதைகள் உண்டாகும்.
அவர்கள் ஒரு டம்ளர் மோர் குடிக்க வயிற்று எரிச்சல் கட்டுப்படும் .
சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளுக்கு இணை கலவையாக மோர் பயன்படுகிறது.
உடலுக்கு எவ்விதமான தீங்கையும் உண்டாக்காத காரணத்தால் மோர் பத்தியத்தின் போது கூட பயன்படுத்தக்கூடிய உணவு வகைகளுள் ஒன்று.
மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு கற்றாழை கூழை மாேரோடு கலந்து குடிப்பது மிகச்சிறந்தது.
பொதுவாகவே வெயில் காலங்களில் தண்ணீர் பாட்டில்களை நீரை நிரப்பி செல்வதற்கு பதில் மோர் கலந்து கொண்டு செல்வதால் உடல் சூடு சார்ந்த பல பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக அமையும்.