கரும்புச்சாறு பலன்கள்

கரும்புச்சாறு பலன்கள்

கரும்புச்சாறு என்பது உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் சிறந்த பானமாகும்.

 இது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய் தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பு பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும் இருக்கிறது.

 தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால் கரும்பு சாறை தொடர்ந்து குடித்து வரும்போது அவை மறைந்து விடும்.

 சிலருக்கு பற்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதம் அடைந்து இருக்கும் .

இவர்கள் கரும்புச்சாறை தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கு வலிமை அளிக்கிறது.

 உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது .

இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது.

 வயிற்றுப் புண்களை சரி செய்யும்.

 மலச்சிக்கலை போக்குகிறது .

கரும்புச் சாறுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம் .

இது உடல் சூட்டை குறைக்கும் குணமுடையது.

 நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர்வாகம் செய்கிறது.


 அந்த வகையில் கரும்புச்சாறு அருந்துவதன் மூலம் மூளையும் செயல்பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

 கல்லீரல் நன்கு செயல் புரிய கரும்புச்சாறு துணை புரிகிறது.

 கரும்புச்சாற்றில் உள்ள பொட்டாசியம் வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சரி செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

 சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும் .

கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்ட அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய ரத்த உரைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது .

வைட்டமின் சி அதிகமாக கரும்புச்சாற்றில் காணப்படுகிறது.

 இது தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது.

 தாகத்தை குறைத்து புத்துணர்ச்சி தரும்.
 கரும்புச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கினால் செயற்கை பானத்தை விரும்ப மாட்டார்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை