மீண்டும் பள்ளி செல்லும் குழந்தைகளை தயார்படுத்த பெற்றோருக்கான ஆலோசனைகள்

மீண்டும் பள்ளி செல்லும் குழந்தைகளை தயார்படுத்த பெற்றோருக்கான ஆலோசனைகள்

கோடை விடுமுறை முடிந்து இன்னும் சில தினங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப் போகிறது.

 தாமதமாக எழுந்து, பொறுமையாக சாப்பிட்டு, பிடித்த விளையாட்டுகளை விளையாடி, தங்கள் விருப்பப்படி குழந்தைகள் விடுமுறையை கழித்துக் கொண்டிருப்பார்கள்.

 பள்ளி திறந்ததும் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது அவர்களுக்கு சில வாரங்கள் வரை சற்று சிரமமாகவே இருக்கும்.

 இதனால் குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர் அதிக சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

 பள்ளி திறப்பதற்கு முன்பே குழந்தைகளின் தினசரி நடவடிக்கைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்க்கலாம்.

 அதற்கான ஆலோசனைகள் சில:

 மேலே சொன்ன படி காலையில் எழுந்திருப்பது முதல் இரவு தூங்கச் செல்வது வரை விடுமுறை நாட்களில் குழந்தைகளின் வழக்கங்கள் மாறுபட்டு இருக்கும்.

 இதை மாற்றி மீண்டும் அவர்களின் வழக்கத்தை ஒழுங்கு படுத்துவது பெற்றோருக்கு சவால் ஆனது.

 எனவே பள்ளி திறப்பதற்கு சில வாரங்கள் முன்பிருந்தே இந்த வழக்கத்தை மாற்ற வேண்டும்.

 காலையில் கண்விழிப்பது, குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, தங்களுக்கான வேலைகளை செய்வது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, சரியான நேரத்திற்கு தூங்க செல்வது என குழந்தைகளின் செயல்பாடுகளுக்கு ஒரு கால அட்டவணை தயாரித்து அதற்கு ஏற்றவாறு அவர்களை வழிநடத்த வேண்டும்.

 இந்த பயிற்சி குழந்தைகளுக்கு புதிய கல்வியாண்டில் சிரமமின்றி செயல்பட உதவும் .

அதுமட்டுமில்லாமல் இதன் மூலம் எதிர்காலத்தில் நேரத்தை சரியாக நிர்வகிப்பதற்கும் கற்றுக் கொள்ள முடியும்.

 பள்ளி திறக்கும் போது பெற்றோர்கள் குழந்தைகளிடம் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு சரிபார்ப்பு பட்டியலை உருவாக்கச் சொல்வது அவசியம்.

 அதில் புத்தகங்கள், குறிப்பேடுகள், என தினமும் அவர்கள் பள்ளிக்கு கொண்டு செல்ல வேண்டிய அனைத்தையும் பட்டியலிட சொல்லலாம் .

பள்ளி திறக்கும் நாளில் தேவையான அனைத்தையும் வைத்திருப்பதை உறுதிப்படுத்த இந்த பட்டியல் உதவும்.

 இப்பழக்கம் எதிர்காலத்தில் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும் .

பேனா, பென்சில் போன்ற பொருட்களில் ஏதாவது உடைந்தாலோ? திருடு போனாலும் உடனடியாக மாற்றுப் பொருள் கொடுக்கும் வகையில் முன்கூட்டியே கூடுதலாக வாங்கி வைத்திருப்பது சிறந்தது.

 குழந்தைகளுக்கு ஏற்படும் தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்க்க யோகா, தியானம் போன்ற செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

 குழந்தைகளிடம் உள்ள மற்ற திறமைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.

 பாட்டு, நடனம், விளையாட்டு, இசைக்கருவி வாசிப்பது போன்றவற்றில் அவர்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்கான வகுப்புகளில் சேர்க்கலாம்.

 இதன் மூலம் குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்க்க முடியும்.

 குழந்தைகள் கல்வியிலும் மற்ற திறமைகளும் சிறந்து விளங்குவதற்கு அவர்கள் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம்.

 அதற்கு சத்தான உணவுகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

 காலை மற்றும் மதிய உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வகையில் ஆரோக்கியம் நிறைந்ததாக தயாரித்து கொடுத்தால் அது மீதும் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

 அதற்கான பட்டியலை குழந்தைகளோடு ஆலோசித்து தயார் செய்யலாம் .
சரியான திட்டமிடல், உறங்க அமைப்பு ஆகியவை இருந்தால் குழந்தைகளுக்கு வெற்றிகரமான கல்வியாண்டு பெற்றோர் உருவாக்கித் தர முடியும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை