ஹோட்டல்கள் சில டிப்ஸ்

ஹோட்டல்கள் சில டிப்ஸ்

உங்கள் திட்டமே ஹோட்டலில் ஓய்வுதான் எனில் கஸ்டமரின் தகவல்களின் அடிப்படையில் ரூம்களை பார்த்து தேர்வு செய்யுங்கள்.

 வசதி, கஸ்டமர் கேர், சர்வீஸ், கழிவறை, பாத்ரூம் சுகாதாரம், உணவு என அனைத்தும் கவனிப்பது சிறப்பு .

மேலும் நான்கு அதற்கு மேல் ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்ட ஹோட்டல்கள் தேர்வு செய்வது நல்லது.

 தங்கி தூங்கி எழுந்தவுடன் ஜூட் என ஊர் சுற்றும் திட்டமிடில் முடிந்தவரை ஹோட்டல் ரூம்களை பட்ஜெட்டில் மிகக் குறைந்த செலவில் தேர்வு செய்தல் நலம்.

 நாள் முழுக்க பூட்டி கிடக்க போகும் ரூமுக்கு ஏன் செலவு செய்ய வேண்டும்.

 நண்பர்களாக செல்கையில் அந்த ஊரில் இருக்கும் டார்மெண்டரி அல்லது ஹாஸ்டல் ஸ்டைல் ரூம்களை தேர்வு செய்தால் சில புது நண்பர்களும் கிடைப்பர்.

 மேலும் அந்தந்த ஊர் சிறப்புகளை அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.

 அந்த ஊர் உணவுகளைத் தேடிப் பிடித்து சாப்பிட்டால் செலவு குறைவாக இருக்கும்.

 சில அருமையான சுவை, அனுபவமும் கிடைக்கும்.

 குறிப்பாக நம்மூர் வருபவர்கள் எப்படி இட்லி, தோசை என ஏரியா கடைகளில் சாப்பிட்டால் வெறும் 30 முதல் ரூபாயா 60 காலை உணவு முடித்து விடுவார்களோ? அதே பாணி தான்.

 ஹோட்டல் இருக்கும் தூரம் முக்கியம்.

 பொதுவாக சுற்றுலா இடங்களுக்கும் நீங்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கும் உண்டான தூரம் 5 கிலோ மீட்டருக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் .
இல்லையெனில் பாதி நேரம் பயணத்திலேயே கழியும்.

1 கருத்துகள்

  1. பெயரில்லா24 மே, 2024 அன்று 10:37 AM

    நல்ல கருத்து & செலவு நம்ம பட்ஜெட் உள்ளாக இருப்பது சிறப்பு மேலும் உடல் நலமும் பாதிக்கப்படாது

    பதிலளிநீக்கு
புதியது பழையவை